தமிழக அரசு கிரீன் சிக்னல்.. களமிறங்கும் புது மினி பஸ் - மக்களுக்கு ஜாக்பாட்...!
தனியார் பங்களிப்புடன் மினி பேருந்து திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 12 முதல் 14 இருக்கைகள் கொண்ட தனியார் மேக்ஸி கேப் வேன்களை மினி பேருந்துகளாக இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தனியார் பங்களிப்புடன் தற்பொழுது மினி பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. சென்னை உட்பட முக்கிய மாநகராட்சிகளிலே மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் இந்த சிற்று சேவைகளை பொறுத்தவரை கிட்டத்தட்ட 5000 சிற்றுந்துகள் அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் இயக்குவதற்கான தேவைகள் இருப்பதாக பார்க்கப்படுகின்றது. ஆனால் 1200 பேருந்துகள் வரை தான் தற்போது இயக்கப்படுகின்றன. எனவே அந்த இடைவெளியை குறைக்கக்கூடிய விதமாக கூடுதலாக அந்த மினி பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மினி பேருந்து பற்றாக்குறை இருக்கக்கூடிய பகுதிகளுக்கு தேவைகளை நிறைவேற்றும் வகையில், மேக்சிகேப் போன்ற தனியார் வேன்கள் மூலமாக சிற்றுந்து சேவையை வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் 2000 மேக்சி கேப் வகையிலான வேன்களை மினி பேருந்துகள் இயங்கக்கூடிய வழித்தடத்தில் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு, அதற்கான அனுமதியும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் இந்த 12 முதல் 14 இருக்கைகளை கொண்ட வேன்களை பொதுமக்களுடைய பயன்பாட்டிற்காக வழங்கக்கூடிய விதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராம பகுதிகளை இணைக்க கூடிய விதமாக 25 கிலோமீட்டர் தூரம் வரை மினி பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது.
அதன்படி 18 கிலோமீட்டர் அளவிற்கு பேருந்து சேவை உள்ள வழித்தடங்களிலும், 8 கிலோமீட்டர் தூரம் வரை பேருந்து சேவையற்ற வழித்தடங்களிலும் இயக்கி கொள்ளலாம் என்று தனியார் மினி பேருந்து உரிமையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தற்போது மலைப்பகுதிகள். கிராம பகுதிகள, குறுகளான சாலைகளிலே இந்த மேக்சி வகையிலான பேன்களை அனுமதிப்பதன் மூலமாக அவை பொதுமக்களுக்கு மேலும் பலன் தரக்கூடும். பேருந்து சேவை இல்லாத பகுதிகளில் பொதுமக்கள் அந்த பேருந்து சேவையை போன்று பயன்படுத்த கூடும் என்ற அடிப்படையிலே வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாகவும், மாவட்ட நிர்வாகங்கள் மூலமாகவும் அனுமதி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதையும் படிங்க: கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருக்கே... இபிஎஸ்க்கு அடுத்தடுத்து சிக்கல்...!
அதே நேரம் பயணிகளுடைய பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வகையிலே சம்பந்தப்பட்ட வாகனங்களில் இருக்கைகளை மட்டுமே நிரப்பி கொள்ள வேண்டும், பேருந்துகளில் எல்லாம் கிட்டத்தட்ட 20 பேர் நின்று கொள்வதற்கு அனுமதி உண்டு. ஆனால் இந்த சிற்றுண்டுகளாக இயக்கப்படக்கூடிய மேக்சிகேப் வாகனங்களிலே இருக்கைகளில் அமர்ந்து பயணிப்பதற்கு மட்டும்தான் அனுமதி உண்டு. நின்று கொண்டு பயணிக்க கூடாது என்பது உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு விலக்கு.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!