CLOSED...! இஸ்ரேலின் டெல் அவீவ் சர்வதேச விமான நிலையம் மூடல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
மார்ச் ஆறாம் தேதி வரை இஸ்ரேலில் உள்ள டெல் அவீவ் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் தலைநகரமான டெல் அவீவ் அருகே அமைந்துள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. இது இஸ்ரேலின் மிக முக்கியமான சர்வதேச விமான போக்குவரத்து மையமாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான இராணுவ தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த பதற்றம் காரணமாக இஸ்ரேலிய வான்வெளி முழுவதும் மூடப்பட்டுள்ளது. இதனால், பென் குரியன் விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் கடந்த சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி வெளியிட்ட NOTAM அறிவிப்பின்படி, விமான நிலையம் வரும் மார்ச் 6 ஆம் தேதி காலை 10 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
இந்த காலகட்டத்தில் சிறப்பு அனுமதி பெற்ற விமானங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும். பொதுவான வணிக விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மூடல் காரணமாக ஏர் லைன் நிறுவனங்கள் போன்ற El Al, Arkia, Israir ஆகிய இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மார்ச் 3 வரை தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் United Airlines, Lufthansa, KLM, British Airways, Air France உள்ளிட்டவை டெல் அவீவ் சேவைகளை மார்ச் 6, 7 அல்லது 8 வரை ரத்து செய்துள்ளன.
இதையும் படிங்க: பழிக்குப்பழி..! இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்? குறி வைத்த ஈரான்..!!
இதனால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். விமான நிலையம் திறக்கப்பட்டவுடன் மீட்பு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், பல இஸ்ரேலியர்கள் எகிப்து எல்லை வழியாக தரைவழி பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். Arkia நிறுவனம் Taba எல்லையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் போராட்டம் வெடிக்கும்...! பாதுகாப்பை பலப்படுத்துங்க..!! உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!