தமிழக அரசியலில் மெகா திருப்பம்...!! - இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... தம்பிதுரை கொடுத்த அடிதூள் அப்டேட்...!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என அவருடனான ஆலோசனைக்கு பிறகு தம்பிதுரை எம்பி தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
அதிமுகவுடைய மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருக்கக்கூடிய தம்பிதுரை சற்று முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அந்த சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுக மீண்டும் அதிகாரத்திற்கு வரும். அதிமுகவுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து ஒரு நல்லாட்சியை தருவார். தமிழக மக்களுடைய மனநிலையும் அதிமுக அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதாகத்தான் இப்பொழுது இருக்கின்றது என்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
அதிமுக மிக குறைவான இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கக்கூடிய சூழலிலும் தம்பிதுரை இவ்வாறு சொல்லியிருப்பதன் மூலமாக தமிழக அரசியல் களத்தில் சில முக்கியமான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் தம்பிதுரையே கூறுகின்றார் தமிழ்நாட்டினுடைய அரசியல் சூழல் குறித்து சில முக்கியமான ஆலோசனைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். அதன் அடிப்படையில் தான் கூறுகின்றோம். எங்களுடைய கட்சியின் தலைவர் அதிகாரத்திற்கு வருவார். முதலமைச்சராக பொறுப்பேற்பார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று நல்லாட்சி தருவார் என்ற ஒரு தகவலை அவர் சொல்லிச் சென்றிருக்கின்றார்.
எனவே ஆத்திமுக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சில வியூகங்களை வகுத்து அதன்படி செயல்பட்டுக் கொண்டிருப்பதை தம்பிதுரை இப்போது உறுதி செய்திருக்கின்றார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போன் செய்து ஆட்சி அமைக்க தங்களுக்கு ஆதரவு தரும் படி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடந்தே அன்றே தொங்கும் சட்டப்பேரவை தான் அமையும் என கணித்த எடப்பாடி பழனிசாமி, தவெக தற்போது திணறி வரும் நிலையில் சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சித்து வருவதாக கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!
திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் மற்றும் விசிக தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டாலும், அவர்கள் நேரில் வந்து ஆதரவு கடிதம் கொடுக்கத் தயங்குவது விஜய்யை நிலைகுலையச் செய்துள்ளது. கூட்டணிக்கு வரமாட்டோம் என கட்சிகள் அடம்பிடிப்பது அடுத்தடுத்து விஜயின் நம்பிக்கையை சீர்குலைத்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இபிஎஸ் தெம்பா இருக்காரு..! நல்லாட்சி கொடுப்பாரு..! பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை..!