×
 

அடி மேல் அடி வாங்கும் பாகிஸ்தான்.. பெரிய இடியை இறக்கிய உலக வங்கி!!

சிந்து நதி நீர் குறித்த கோரிக்கையை உலக வங்கி மறுத்துள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.  இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.

பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. 50க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டன. முன்னதாக பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக நம் நாடு அறிவித்தது.

இதையும் படிங்க: சிந்து நதி எங்களுக்கே சொந்தம்... மீண்டும், மீண்டும் பாகிஸ்தான் திமிர் பேச்சு...!

கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன. ஆனால் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. இதற்கிடையே சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்த விவகாரத்தில் மீண்டும் உலக வங்கி தலையிட வேண்டும்.

இந்தியாவிடம் பேசி சிந்து நதிநீரை பெற்று தர வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த விவகாரத்தில் தலையீடு செய்ய உலக வங்கி இன்று மறுத்துவிட்டது. இதுதொடர்பாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா பேசுகையில், சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் உலக வங்கி தலையீட்டு பிரச்சனையை சரிசெய்யும் என்று ஊடகங்களில் நிறைய யூகங்கள் வந்துள்ளன.

ஆனால் அது எல்லாம் முட்டாள்தனமானது. ஏனென்றால் இந்த விஷயத்தில் உலக வங்கி மத்தியஸ்தராக மட்டுமே செயல்பட்டது. சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் என்பது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை. அதில் மத்தியஸ்தம் மட்டுமே செய்தோம். மற்றபடி தலையீடு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க: கதை முடிஞ்சது..! புதுசா 2 அணைகளுக்கு பிளான் ரெடி..! பாலைவனம் ஆகும் பாகிஸ்தான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share