தி. மலை கிரிவலம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. வன்கொடுமை செய்த காமக்கொடூரன் கைது..!
திருவண்ணாமலையின் கிரிவலம் சென்ற நேபாள பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சேட்டு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற நேபாள பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை, தமிழகத்தின் ஆன்மீகத் தலங்களில் தனித்துவம் வாய்ந்த ஒரு புண்ணிய தலமாக விளங்குகிறது. இது சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு அருணாசலேஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமான் மலை வடிவில் காட்சியளிப்பதாக ஐதீகம். "நினைத்தாலே முக்தி தரும்" தலமாகக் கருதப்படும் திருவண்ணாமலையில் மலையைச் சுற்றி வரும் கிரிவலம், பக்தர்களுக்கு ஆன்மீக மற்றும் உடல் நலனைப் பெறுத்தரும் ஒரு புனித யாத்திரையாகும்.
திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படுகின்றன, குறிப்பாக பௌர்ணமி நாட்கள் மற்றும் கார்த்திகை மகா தீபத் திருவிழா போன்ற சிறப்பு நாட்களில். இந்த ஏற்பாடுகள் பக்தர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்படுகின்றன.
கிரிவலப் பாதையில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் உதவுகிறது.
இதையும் படிங்க: முழு சங்கி இபிஎஸ்... பதறிப் போயிட்டாப்ல..! உதயநிதி விமர்சனம்..!
இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலம் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பின் நேபாள தூதரகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட சேட்டு என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்ற பெண் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அணுஅணுவாக சித்திரவதை.. மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்! தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை..!