இனி டிலே ஆகாது!! கவர்னர் ஆர்.என்.ரவி மும்முரம்! 3 மாதங்களில் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல்!!
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், மூன்று மாதங்களில் 95 சதவீத மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக கவர்னர் மாளிகை புள்ளி விபரங்களுடன் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் செய்கிறார், அவரது நடவடிக்கைகள் மக்கள் நலனுக்கு எதிரானவை என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 2025 அக்டோபர் 31 ஆம் தேதி வரை, 211 சட்டமசோதாக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 81 சதவீதம் (170) மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் 95 சதவீத மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குள் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த புள்ளிவிபரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளியில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
கவர்னர் மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2021 செப்டம்பர் 18 முதல் 2025 அக்டோபர் 31 வரை பெறப்பட்ட 211 மசோதாக்களில், 170 மசோதாக்களுக்கு (81 சதவீதம்) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில்:
இதையும் படிங்க: அதிமுகவை உடைத்து கைப்பற்ற திட்டம்!! பாஜக போட்ட பக்கா ப்ளான்! செங்கோட்டையன் சொல்லும் உண்மைகள்!
மேலும், 27 மசோதாக்கள் (13 சதவீதம்) ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 60 சதவீதம் மசோதாக்கள் மாநில அரசின் பரிந்துரைப்படி அனுப்பப்பட்டவை. மீதமுள்ள 8 மசோதாக்கள் கடந்த அக்டோபர் மாத கடைசி வாரத்தில் பெறப்பட்டவை. அவை தற்போது பரிசீலனையில் உள்ளன. 6 மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்திருந்தார். அவை யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) விதிகளுக்கு மற்றும் பாராளுமன்ற சட்டத்திற்கு மற்றும் மாநில சட்டமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டவை எனக் கருதப்பட்டன. இதுகுறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மசோதாக்கள் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பின், கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, கவர்னர் ரவி ஒவ்வொரு மசோதாவையும் கவனமாக ஆய்வு செய்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, மக்கள் நலனைப் பாதுகாக்கிறார். அரசியல் பாரபட்சமின்றி, நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் கடைப்பிடித்து கடமைப்பட்டு வருகிறார். தமிழக மக்களின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள கவர்னர், தமிழ் பாரம்பரியம், கலை, இலக்கியம், ஆன்மிகம், பண்பாடு ஆகியவற்றை ஊக்குவித்து ஆதரவு அளித்து வருகிறார். தமிழ் கலாசாரத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். இந்திய அரசியலமைப்பின்படி, தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுகிறார்.
இந்த விளக்கம், கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ பதிவுகளை அடிப்படையாகக் கொண்டது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, கவர்னரின் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு இணங்கியவை என்பதை உறுதிப்படுத்துகிறது. 2025 ஏப்ரல் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம், கவர்னர் ஒப்புதல் தாமதம் குறித்த வழக்கில், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவித்தது. இது கவர்னரின் செயல்பாடுகளை மேலும் தெளிவுபடுத்துகிறது.
இதையும் படிங்க: தொடர் நெருக்கடி கொடுக்கும் அமலாக்கத்துறை!! அடக்கி வாசிக்கும் அமைச்சர் நேரு!! தேர்தல் ஃபீவர்!