×
 

செக் வைத்த போலீஸ்... உடைத்தெறிந்த விஜய்... திருச்சியை அதிர விட்ட தரமான சம்பவங்கள்...!

ஆனால் விஜய் மிகவும் கவனத்தோடு இருக்கின்றார். ஒருவேளை விஜய் தன்னுடைய வாகனத்தினுடைய மேற்கூரையை திறந்து ஏறி நின்று வணக்கம் கூறினால் கூட அது, அதற்கு பெயர் ரோட் ஷோ.

2027 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தன்னுடைய முதல் சுற்றுப்பயணத்தை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வரக்கூடிய அரை நூற்றாண்டு கால தமிழகத்தில் தன்னுடைய திரை உலக செல்வாக்கின் மூலமாக தொண்டர்களின் வாயிலாக இந்த மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மிக விரைவான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

 அதாவது தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கக்கூடிய நிலையிலேயே தன்னுடைய முழு அளவிலான படைபலத்தோடு தேர்தல் பரப்புரையை தொடங்கி இருக்கின்றார். இன்று தொடங்கக்கூடிய இந்த தேர்தல் பரப்புரை திருச்சிராப்பள்ளியில் இருந்து தொடங்குகின்றது. வழக்கமாக முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் தங்களுடைய கட்சி கூட்டங்கள், மாநாடுகளை திருச்சியில் தான் நடத்துவார்கள். 

திருச்சிராப்பள்ளி பல திருப்புமுனை அரசியல் மாநாடுகளை பார்த்த மண் இரண்டு முக்கிய கட்சிகளுக்கும் பல திருப்புமுனை மாநாடுகள் நடத்தி, தொண்டர்களை தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டும் சுறுசுறுப்பாக உத்வேகத்தோடு பணியாற்ற செய்யக்கூடிய மண்ணாக திருச்சி பல ஆண்டுகளாக திகழ்கிறது.  எனவே தான் விஜய்யும் திருச்சி மண்ணிலிருந்து தன்னுடைய தேர்தல் பயணத்தை தொடங்குகின்றார்.  விஜய் வழக்கமாக திருப்புமுனை மாநாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய திருச்சிராப்பள்ளியை தன்னுடைய முதல் அரசியல் பயணத்திற்கான வித்தாக மாற்றி இருக்கின்றார்.

இதையும் படிங்க: #BREAKING விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பா? - நாகை எஸ்.பி. பகிர்ந்த பரபரப்பு தகவல்...!

விஜய் மரக்கடை பகுதியிலே தன்னுடைய தேர்தல் சுற்று பயணத்தை தொடங்கி அடுத்த கட்டமாக பெரம்பலூர் அரியலூர் ஆகிய மாவட்டங்களிலே இன்றைய நாளிலே விஜய் பரப்புரை செய்ய இருக்கின்றார். தொடர்ந்து விஜயனுடைய வாகனத்தை நெருங்கிச் செல்லக்கூடிய காவல் உயர் அதிகாரிகள், உங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தையும் கடந்து நீங்கள் மெதுவாக சென்று கொண்டிருக்கின்றீர்கள். அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கிடையாது.  நீங்கள் மெதுவாக செல்வது அணிவகுப்பை போன்று இருக்கின்றது என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் விஜய் மிகவும் கவனத்தோடு இருக்கின்றார். ஒருவேளை விஜய் தன்னுடைய வாகனத்தினுடைய மேற்கூரையை திறந்து ஏறி நின்று வணக்கம் கூறினால் கூட அது, அதற்கு பெயர் ரோட் ஷோ. அதன் பின்னர் தடையை மீறி ரோட் ஷோ மேற்கொண்டதாக விஜய் வழக்கை சந்திக்க நேரிடும். ஆனால் தற்பொழுது அவர் செல்லக்கூடிய அந்த நிலையிலே ரசிகர்கள் தொண்டர்கள் தன்னுடைய நோக்கி கையசைக்க கூடிய நிலையில் அவர்களை நோக்கி உள்ளே அமர்ந்தபடியே கையசைத்தபடி சென்று கொண்டிருக்கின்றார். எனவே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெறக்கூடிய இந்த முதல் தேர்தல் சுற்றுப்பயணமானது தடைகளை மீறிய ஊர்வலமாகவும் மாறிவிட்டது. மக்கள் வெள்ளத்திற்குள் ஊர்ந்து செல்லும் விஜய் வாகனத்தை வேகப்படுத்தவும் முடியாமல், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

இதையும் படிங்க: #BREAKING விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு... தவெகவிற்கு எதிராக காய் நகர்த்த ஆரம்பித்த திமுக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share