×
 

நோபல் பரிசு எனக்குத்தான்!! பூரித்துப்போன அதிபர் ட்ரம்ப்! நீண்ட நாள் கனவு நிறைவேறியது!

நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா! என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று பலமுறை வெளிப்படையாக விருப்பம் தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெறவில்லை. அந்த உயரிய விருது வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனநாயகப் போராளியுமான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது.

வெனிசுலாவில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து, மக்களின் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடி வரும் மச்சாடோவின் பங்களிப்பை அங்கீகரித்தே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பிறகு, மச்சாடோ டிரம்புக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். தனக்கு கிடைத்த நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நோபல் பரிசை ட்ரம்பிடமே கொடுத்துவிட்டேன்!! மச்சாடோ அதிரடி அறிவிப்பு! வெடிக்கும் சர்ச்சை!

இதற்கு நோபல் கமிட்டி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. “நோபல் பரிசு ஒருவருக்கு வழங்கப்பட்ட பிறகு அது வாழ்நாள் முழுவதும் அவருடையதே. அதை யாருக்கும் மாற்றி வழங்கவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியாது” என்று தெளிவாக அறிவித்தது.

இருப்பினும், இந்த சர்ச்சைக்கு மத்தியில் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார். அப்போது அவர் தனது நோபல் அமைதிப் பரிசின் தங்கப் பதக்கத்தை டிரம்பிடம் சின்னச் செயலாக வழங்கினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளார்: “வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அவர் பல சோதனைகளைத் தாண்டி வந்த அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா!”

டிரம்பின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நோபல் பதக்கத்தை ஏற்றுக்கொண்டாரா அல்லது வெறும் சின்னச் சைகையாக மட்டுமே இருந்ததா என்பது குறித்து வெள்ளை மாளிகை இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

இருந்தாலும், இந்த நிகழ்வு அரசியல், ஜனநாயகம், சர்வதேச உறவுகள் ஆகியவற்றுக்கு இடையேயான சுவாரஸ்யமான தொடர்பை மீண்டும் உலகுக்கு நினைவூட்டியுள்ளது.

இதையும் படிங்க: நோபல் பரிசை ட்ரம்பிடமே கொடுத்துவிட்டேன்!! மச்சாடோ அதிரடி அறிவிப்பு! வெடிக்கும் சர்ச்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share