×
 

ஹார்வார்ட் பல்கலை.க்கு அடி மேல் அடி.. அதிபர் டிரம்ப் விதித்த அடுத்த தடை..!

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற பழமையானது ஹார்வார்ட் பல்கலைக்கழகம். தனியார் பல்கலைக்கழகமாக செயல்படும் ஹார்வார்ட் கல்வி நிறுவனத்தில் மெரிட்டில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து பல மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்துக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பிய அமெரிக்க அரசு “பல்கலைக்கழகத்தில் யூதர்களுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு தடை செய்ய வேண்டும், மாணவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுதுவது, பேசுவது, நிதி திரட்டுவது, கூட்டம் போடுவதை தடை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து” எழுதப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இந்தியர்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: அதிபர் ட்ரம்ப் திட்டம்..!

இந்த கடிதத்தை ஏற்க மறுத்த ஹார்வார்ட் பல்கலைக்கழகம், “ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தனியாருடையது. ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம். இங்கு பயிலும் மாணவர்கள் மெரிட்டில் தேர்ச்சி பெற்று பயில்கிறர்கள். மாணவர்கள் சேர்க்கை குறித்து தெளிவான விதிகளை வெளிப்படையாக அறிவித்து அதன்படி செயல்படுகிறோம். 

இங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் மதர்சார்பற்ற தன்மையோடு இருக்கிறார்கள். மாணவர்கள் முகக்கவசம் அணியக்கூடாது, யூதர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தல், ஒன்றுகூடுதலில் ஈடுபடக்கூடாது, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசக்கூடாது, பல்கலைக்கழக கட்டிடங்களில் போராட்டம் செய்யும் மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், மாணவர்கள் நிதி திரட்டுதல், குழுவாகச் சேர்தல், கிரிமினல் செயல்களை தூண்டுதல், சட்டவிரோத செயல்கள், வன்முறை ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கோரினார். ஆனால், நாங்கள் இந்த கோரிக்கைக்கு ஏற்கவில்லை. இதனால் பல்கலைக்கழகத்துக்கான 230 கோடி டாலர் நிதியையும், 6 கோடி டாலர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது அதிபர் ட்ரம்ப் அரசு" எனத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த நடவடிக்கைகளை ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து ஏற்க மறுத்ததால் இருதரப்புக்கிடையே மோதல் முற்றியது. நிதியுதவியையும், ஒப்பந்தத்தையும் ரத்து செய்த டிரம்ப் அரசு, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இப்படி அடுத்தடுத்து அடிகளை வாங்கி வரும் ஹார்வார்ட், தற்போது புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது. மாணவர்கள் பறிமாற்ற திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து உள்ளது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

இது குறித்து உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி கூறியதாவது: வன்முறை, யூத எதிர்ப்பு ஆகியவற்றை வளர்க்க துணை போவதால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்து, அவர்களின் கல்விக் கட்டணத்திலிருந்து பயனடைவது பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சலுகை, உரிமை அல்ல. சரியானதைச் செய்ய ஹார்வர்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. அது மறுத்துவிட்டது. சட்டத்தை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளம் ஒன்றில், “ஹார்வர்டை இனி ஒரு நல்ல கற்றல் இடமாகக் கூட கருத முடியாது, மேலும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளின் எந்த பட்டியலிலும் கருதக்கூடாது” என ட்ரம்ப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிர புற்றுநோய் பாதிப்பு.. டிரம்ப் வருத்தம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share