×
 

150 முறை உலகத்தை அழிக்க முடியும்!! எங்ககிட்ட அவ்ளோ அணு ஆயுதம் இருக்கு!! மிரட்டும் ட்ரம்ப்!

அமெரிக்கா வேறு எந்த ஒரு நாட்டை விடவும் அதிக அணு ஆயுதங்களை கொண்டுள்ளது. உலகத்தை, 150 முறை தகர்க்கும் அளவுக்கு எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார். "அமெரிக்காவிடம் உலகை 150 முறை தகர்க்கும் அளவுக்கு அணு ஆயுதங்கள் உள்ளன. வேறு எந்த நாட்டையும் விட அதிகம்" என்று கூறினார். 

மேலும், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகள் பூமிக்கடியில் ரகசியமாக அணு சோதனைகளை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். இதனால், 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவும் அணு சோதனையை மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தார்.

டிரம்ப் பேசுகையில், "பிற நாடுகள் ரகசியமாக சோதனை செய்கின்றன. அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நாங்கள் வெளிப்படையானவர்கள். சோதனை செய்யப் போகிறோம் என்று சொல்கிறோம். அமெரிக்கா மட்டும் சோதனை செய்யாமல் இருப்பது சரியல்ல. நமது ஆயுதங்கள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கடல் ராட்சசி! அணு ஆயுதத்தில் அடுத்த அரக்கனை இறக்கும் ரஷ்யா!! ட்ரம்ப் தலையில் பேரிடி!

அமெரிக்கா 1992-ஆம் ஆண்டு முதல் முழு அணு சோதனைகளைத் தன்னார்வமாக நிறுத்தி வைத்திருந்தது. இப்போது அந்தக் கொள்கையை மாற்றி, சோதனை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பூமிக்கடியில் சிறிய அளவிலான சோதனைகளைச் செய்வதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் அவை வெடிப்பு சோதனைகள் அல்ல என்று அந்த நாடுகள் மறுக்கின்றன. டிரம்ப் இதை ஏற்க மறுக்கிறார். "நாங்கள் அதிர்வுகளை உணர்கிறோம். ஆனால் அவர்கள் சொல்வதை நம்ப முடியாது" என்றார்.

அமெரிக்காவிடம் தற்போது 5,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யாவிடம் 5,500, சீனாவிடம் 500-க்கும் குறைவு. ஆனால் டிரம்ப், "எங்கள் ஆயுதங்கள் உலகை 150 முறை அழிக்கும் சக்தி கொண்டவை" என்று பெருமிதம் தெரிவித்தார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு, 1996-ஆம் ஆண்டு ஐ.நா.வின் விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) மீறுவதாக உள்ளது. உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சீனா "நாங்கள் முதலில் அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டோம்" என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதாகக் கூறியது. ரஷ்யா, "அமெரிக்கா சோதனை செய்தால் நாங்களும் செய்வோம்" என்று எச்சரித்தது.

டிரம்பின் இந்த முடிவு, புதிய அணு ஆயுதப் போட்டியைத் தொடங்கும் என்று வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். உலக அமைதி ஆபத்தில் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலக அரசியலை மாற்றி அமைக்கும் என்று கருதப்படுகிறது.

இதையும் படிங்க: ட்ரம்புக்கு ஆப்பு வைத்த புடின்! செயற்கை சுனாமியை உருவாக்கும் அணு ஆயுதம்! ரஷ்யாவின் கடல் அரக்கன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share