×
 

அணு ஆயுதம் உருவாக்கவும் கூடாது! வைத்திருக்கவும் கூடாது! ஈரானுக்கு கடைசி வார்னிங் கொடுத்த அதிபர் ட்ரம்ப்!

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதையோ அல்லது வைத்திருப்பதையோ நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதையோ அல்லது வைத்திருப்பதையோ நிரந்தரமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்த போர் பிப்ரவரி இறுதியில் தொடங்கியது. போர் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த மாதம் அமைதி ஒப்பந்தத்துக்காக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட பேச்சு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும், புதிய அணுசக்தி பேச்சுவார்த்தையை தொடங்கவும் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது:

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் ராணுவ தளம்!! வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்கா! போர் பதற்றம்!

“ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது என்பதை முழுமையாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு உடனடியாகத் திறக்கப்பட வேண்டும். அங்கு எந்தக் கண்ணிவெடிகளும் இருக்கக் கூடாது.

எஞ்சியுள்ள கண்ணிவெடிகளை ஈரான் உடனடியாக அகற்ற வேண்டும். அமெரிக்காவின் முன்னெப்போதும் இல்லாத கடற்படை முற்றுகை காரணமாக ஜலசந்தியில் சிக்கிய கப்பல்கள், போக்குவரத்து மீண்டும் தொடங்கியவுடன் விடுவிக்கப்படும்” என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் வர்த்தகத்துக்கு மிக முக்கியமான கடல் வழியாகும். இந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, சுங்கக் கட்டணங்கள் இல்லாமல் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா ஏற்கனவே தனது நீர்மூழ்கி கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் மூலம் பல கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் அணு ஆயுத திட்டத்தை கைவிட வேண்டும் என்பது டிரம்ப் நிர்வாகத்தின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இந்தப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்தால், மேற்காசியப் பகுதியில் அமைதி திரும்ப வாய்ப்பு உள்ளது. எனினும், இரு தரப்புக்கும் இடையேயான நம்பிக்கைப் பற்றாக்குறை இன்னும் தொடர்வதால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்படி முன்னேறும் என்பது முக்கியமானதாக உள்ளது.

உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. 

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி இனி அனைவருக்கும் திறந்தே இருக்கும்! அமெரிக்கா அதனை கண்காணிக்கும்! அதிபர் ட்ரம்ப் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share