×
 

ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் ராணுவ தளம்!! வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்கா! போர் பதற்றம்!

தெற்கு ஈரானில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் நகரில் முக்கிய ராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

தெற்கு ஈரானில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் பந்தர் அப்பாஸ் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பயங்கர குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டு, எதிரி ஏவுகணைகளைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டன.

இந்தத் தாக்குதல் குறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பந்தர் அப்பாஸில் உள்ள ஈரானின் தரைக்கட்டுப்பாட்டு மையமே இலக்கு வைக்கப்பட்டது. 

அமெரிக்கப் படைகள் மற்றும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் பல போர் டிரோன்களை அமெரிக்கப் படைகள் நடுவானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என்றும், நிலவும் போர்நிறுத்தத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காகவே இது செய்யப்பட்டது என்றும் அந்த அதிகாரி விளக்கினார்.

இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை திறப்பது கட்டாயம்! இல்லையென்றால் இன்னொரு வழியில் திறக்கப்படும்! மார்கோ வார்னிங்!

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியாகும். இப்பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகம் ஈரானின் ராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாகப் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா கருதுகிறது. இத்தாக்குதல் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

ஈரான் தரப்பில் இதுவரை உத்தியோகபூர்வமான விரிவான எதிர்வினை வெளியிடப்படவில்லை. ஆனால், தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. 

இந்த சம்பவம் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் பெரும்பாலான எண்ணெய் வர்த்தகம் நடைபெறுவதால், இப்பகுதியில் ஏற்படும் எந்த அசாதாரணமும் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. 

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் திறந்திருக்கும் என்று உறுதியளித்த நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈரான் அணு ஆயுதத் திட்டம் மற்றும் பிராந்திய பதற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த வான்வழித் தாக்குதல் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 

உலக நாடுகள் இந்த சம்பவத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அடுத்த சில மணி நேரங்களில் ஈரான் தரப்பில் இருந்து வலுவான எதிர்வினை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காப்பு நடவடிக்கை என்று அமெரிக்கா கூறினாலும், இது புதிய மோதலுக்கு வழிவகுக்குமா என்பதே தற்போது உலகின் முக்கிய கவலையாக உள்ளது.

இதையும் படிங்க: ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!! பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share