×
 

ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு? முன்பே எச்சரித்த பெண் அதிகாரி!? வெள்ளை மாளிகையில் அரங்கேறிய மர்மம்?!

துப்பாக்கி சூடு சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பாக, இன்று இரவு துப்பாக்கி சூடு நடக்கும் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறி இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், “இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடக்கும்” என்று கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன் டிசியில் உள்ள பிரபல ஹில்டன் ஹோட்டலில் நேற்றிரவு வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் ஆண்டு விருந்து நடைபெற்றது. அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விருந்து தொடங்கிய சிறிது நேரத்திலேயே, வெளியே துப்பாக்கிச் சத்தம் கேட்டது. உடனடியாக ரகசியப் பாதுகாவலர்கள் அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பலர் தரையில் படுத்துக் கொண்டு பாதுகாப்பு தேடினர்.

சம்பவத்துக்கு முன்பு, கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிபர் டிரம்ப்பின் உரை இன்றிரவு வழக்கமான பாணியில் இருக்கும். அது வேடிக்கையாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும். இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடக்கும். அனைவரும் இதைப் பாருங்கள். இது மிகச் சிறப்பாக இருக்கும்” என்று கூறினார். 

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்புக்கும் மிகச்சிறந்த உறவு உள்ளது!! ஐஸ் வைக்கும் வெள்ளை மாளிகை!!

https://www.instagram.com/reel/DXkqf8uCCSw/?utm_source=ig_web_copy_link

அவரது இந்தக் கருத்து, “There will be some shots fired tonight” என்ற ஆங்கிலத்தில் பதிவாகி, இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை வெறும் உரைக்கான உருவகமாகக் கருதினாலும், உண்மையில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு ஹோட்டலுக்கு வெளியே நடந்ததாகவும், உள்ளே பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கரோலின் லீவிட் பேசிய வீடியோ தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சிலர் இதை தற்செயலான கருத்தாகக் கூறினாலும், பலர் இந்த நிகழ்வை வைத்து பல்வேறு ஊகங்களை முன்வைக்கின்றனர். அதிபர் டிரம்ப் இந்த சம்பவத்துக்கு பிறகு அமைதியாக இருப்பதாகவும், நிகழ்ச்சியைத் தொடர விரும்பியதாகவும் தெரிவித்தார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக உலகில் பெரும் பேச்சாக மாறியுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'கேமரா கண்கள்' மூடின..!! இந்தியாவின் ஐகானிக் புகைப்படக் கலைஞர் ரகு ராய் மறைவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share