அதிபர் பதவி முடிந்ததும் இஸ்ரேல் பிரதமராக போட்டியிடுவேன்! பகீர் பற்ற வைத்த ட்ரம்ப்! நெதன்யாகு நிலை?!
அமெரிக்காவில் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் தான் போட்டியிட கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் இதை வேடிக்கையாகவே தெரிவித்தார் என ஊகிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் Donald Trump இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவித்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், தனது அமெரிக்க அதிபர் பதவிக்காலம் முடிந்த பிறகு இஸ்ரேலுக்குச் செல்லும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாகவும், அங்கு தனக்கு 99 சதவீத ஆதரவு இருப்பதாகவும் கூறினார். மேலும், “அடுத்த இஸ்ரேல் பிரதமராக போட்டியிடுவது குறித்து யோசிப்பேன்” என்றும் சிரித்தபடி தெரிவித்தார். இருப்பினும், அவர் இந்த கருத்தை நகைச்சுவை கலந்த முறையிலேயே கூறியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதே நேரத்தில், இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahuவை டிரம்ப் வெளிப்படையாக பாராட்டினார். நேதன்யாகு கூறும் விஷயங்களை செய்யத் தயார் என்றும், இஸ்ரேலில் அவருக்கு உரிய மதிப்பு கிடைக்கவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். ஆளும் கூட்டணிக்குள் நீடித்து வரும் உட்கட்சிப் பிரச்சினைகள் காரணமாக நேதன்யாகு கடுமையான அரசியல் அழுத்தத்தை சந்தித்து வருகிறார் என்ற கருத்தும் டிரம்ப் பேச்சில் வெளிப்பட்டது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பிறகு மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உருவான போர் சூழ்நிலை இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இரு தரப்புக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் நிரந்தர தீர்வு எட்டப்படாத நிலை தொடர்கிறது.
இதையும் படிங்க: ஈரான் மீதான தாக்குதலை ஒத்தி வைத்துள்ளேன்!!! முக்கிய பேச்சுவார்த்தைகள் காரணமாக ட்ரம்ப் முடிவு!
இந்த சூழலில் டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த கருத்து உலக அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்க அரசியலில் இருந்து விலகிய பின்னரும் டிரம்ப் சர்வதேச அரசியல் கவனத்தின் மையமாகவே இருந்து வருகிறார் என்பதையும் இந்த சம்பவம் மீண்டும் காட்டியுள்ளது. சமூக வலைதளங்களிலும் அவரது இந்த பேச்சு வேகமாக பரவி பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!! பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்