×
 

சொன்னதை செய்து காட்டிய ட்ரம்ப்!! அமெரிக்கா ஏவுகணை சோதனை வெற்றி!! அணு ஆயுதம் போரின் துவக்கமா?

தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என போர் துறைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "நம்மிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம்" என்று போர் துறைக்கு அழைப்பு விடுத்த சில நாட்களிலேயே, அமெரிக்க விமானப்படை பிரம்மாண்ட ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி அசத்தியுள்ளது.

 உலக நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை தொடர்ந்து சோதித்து வரும் நிலையில், "அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது" என்று டிரம்ப் கூறியது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது அந்த பேச்சுக்கு செயல் ரூபமாக, 'மினிட்மேன்-3' கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று நள்ளிரவில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை, பசிபிக் பெருங்கடலில் உள்ள மார்ஷல் தீவுகளில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. அணு ஆயுதம் இன்றி (unarmed) இந்த சோதனை நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: குறிவைக்கப்படும் காஷ்மீர்! ஊடுருவும் பயங்கரவாதிகள்!! பெரும் சதித்திட்டம் முறியடிப்பு! ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது!

இது வழக்கமான திட்டமிடப்பட்ட சோதனை என்றும், டிரம்பின் உத்தரவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விமானப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் இது டிரம்பின் "ஆயுத சோதனை" அழைப்புக்கு அமெரிக்காவின் உடனடி பதிலாகவே பார்க்கப்படுகிறது.

மினிட்மேன்-3 ஏவுகணை, அமெரிக்காவின் அணு ஆயுத பாதுகாப்பின் முதுகெலும்பு. ஒரே நேரத்தில் பல அணுகுண்டுகளை (warheads) சுமந்து சென்று ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தாண்டி எதிரி இலக்குகளை அழிக்க வல்லது.

இந்த சோதனை, அமெரிக்காவின் அணு ஆயுத அமைப்பு இன்னும் துல்லியமாகவும், நம்பகமாகவும் செயல்படுகிறது என்பதை உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகள் தங்கள் ஏவுகணைகளை அடிக்கடி சோதித்து வரும் நிலையில், அமெரிக்காவும் பின்தங்காது என்பதை இது காட்டுகிறது.

டிரம்பின் இந்த அழைப்பு, உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று சில நாடுகள் விமர்சித்தாலும், அமெரிக்கா "தற்காப்பு நடவடிக்கை" என்று வலியுறுத்துகிறது. இந்த சோதனை செய்தி, உலகளாவிய ஊடகங்களில் முதல் பக்க தலைப்பாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் அணு ஆயுத பலம் இன்னும் உறுதியாக உள்ளது என்பதை இது நிரூபிக்கிறது. உலக அரசியல் அரங்கில் புதிய பதற்றம் ஏற்படுத்தியிருக்கும் இந்த நிகழ்வு, எதிர்காலத்தில் மேலும் பல சோதனைகளுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: ஆபாச வீடியோ... பாலியல் தொல்லை... அச்சத்தில் மாணவிகள்... ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share