ஆட்டத்தை ஆரம்பித்தார் அதிபர் ட்ரம்ப்.. அடுத்தடுத்து வரி விதிப்பு அமல்.. இந்தியா தப்புமா?
ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு 25% வரி விதிப்பை அறிவித்த சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் 12 நாடுகளுக்கு கூடுதலாக வரி விதித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா அங்கம் வகிக்கும் முக்கிய அமைப்புகளில் ஒன்றான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. துவக்க நிகழ்வின் போது பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டன. குறிப்பாக சர்வதேச வர்த்தகத்தை முடக்கும் வகையில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்க கடுமையான வரி விதிப்பதை பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக சாடின.
அந்த அறிக்கையில், சர்வதேச வர்த்தகத்தில் பல விதமான கட்டுப்பாடுகள் பெருகி வருவது கவலை அளிக்கிறது. கண்மூடித்தனமாக வரியை உயர்த்துகிறார்கள். வரி மற்றும் வரி அல்லாத நடவடிக்கைகள் மூலம் சர்வதேச வர்த்தகத்தை முடக்க பார்க்கிறார்கள். சர்வதேச வினியோக சங்கிலியை சீர்குலைக்கவும், சர்வதேச பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மையை கொண்டு வரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்கள் என்று அமெரிக்காவை மறைமுகமாக பிரிக்ஸ் சாடியது.
பிரிக்ஸ் நாடுகளின் வலிமையான மெசேஜ் அமெரிக்காவுக்கு பதற்றத்தை உண்டு பண்ணியது. இந்த அறிக்கை வெளியானதும் அமெரிக்காவின் எதிர்ப்பு கொள்கைகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் சேரும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்தார். இது பிரிக்ஸ் நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே இந்தியா, சீனா உட்பட 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் கூடுதலாக வரி விதித்தார். இதனால் அமெரிக்கா, சீனா இடையே மிகப்பெரிய வர்த்தக போர் வெடித்தது.
இதையும் படிங்க: எலான் மஸ்க் கட்சில் இந்தியருக்கு முக்கிய பொறுப்பு! அமெரிக்கா அரசியலில் அதிரடி ஆரம்பம்!!
டிரம்பின் அடாவடி வரியால் சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயமும் ஏற்பட்டது. பின்னர் 90 நாட்களுக்கு வரியை நிறுத்தி வைத்த டிரம்ப், சம்மந்தப்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கெடு விதித்தார். ஜூலை 9ம் தேதி இந்த கெடு முடிகிறது. சர்வதேச வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் இப்படி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அடாவடியாக செயல்படுவதை தான் பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக கண்டித்தன.
இப்போது பிரிக்ஸ் நாடுகளையும் அதில் சேர விரும்பும் நாடுகளையும் டிரம்ப் மிரட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது, ஜப்பான், கொரியா உட்பட 14 நாடுகள் மீது 25 முதல் 40 சதவீதம் வரை வரிகளை விதித்து உள்ளார். தென் கொரியா மீது 25% வரி, ஜப்பான் மீது 25% வரி, மியான்மர் மீது 40% வரி, லாவோஸ் மீது 40% வரி, தென்னாப்பிரிக்கா மீது 30% வரி, கஜகஸ்தான் மீது 25% வரி, மலேசியாவிற்கு 25% வரி,
துனிசியா மீது 25% வரி, இந்தோனேசியா மீது 32% வரி, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மீது 30% வரி, வங்கதேசம் மீது 35% வரி, செர்பியா மீது 35% வரி, கம்போடியா மீது 36% வரி, தாய்லாந்து மீது 36% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விதிப்புகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ஆகஸ்ட் 1ம் தேதி முதல், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு ஜப்பான் மட்டும் கொரியா நாட்டு தயாரிப்புகளுக்கு 25% வரி விதிக்கப்படும். இந்த நாடுகள் அமெரிக்கா மீது மேலும் வரிகளை உயர்த்த விரும்பினால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரிகளுக்கு மேல் அதிக வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
அமெரிக்காவிற்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த பற்றாக்குறை நமது பொருளாதாரத்திற்கும், உண்மையில், நமது தேசிய பாதுகாப்பிற்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். இருப்பினும், அமெரிக்காவிற்குள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய முடிவு செய்தால், அவர்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய மஸ்க்! புலம்பித் தவிக்கும் ட்ரம்ப்.. மூன்றாவது கட்சி சறுக்குமா? சாதிக்குமா?