×
 

ஒரே நாளில் 1300 பேர் டிஸ்மிஸ்! சீட்டை கிழித்த ட்ரம்ப்! சீர்திருத்த நடவடிக்கையால் அல்லோலபடும் அமெரிக்கா!

அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1300 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார். இது அவரது 2017-2021 காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு திரும்பிய முக்கிய நிகழ்வாகும். இந்த முறை, ட்ரம்ப் அரசு செலவுகளை குறைப்பதற்கும், அரசு நிர்வாகத்தில் திறமையை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. 

ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் நாளில் 26 நிர்வாக உத்தரவுகளை வெளியிட்டார், இது அமெரிக்க வரலாற்றில் ஒரு சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை புலம்பெயர்ந்தோர் கொள்கைகள், எல்லை பாதுகாப்பு, வரி விதிப்பு மற்றும் அரசு செலவு குறைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியவை. இவரது முக்கிய முயற்சிகளில் ஒன்று, "Department of Government Efficiency" (DOGE) என்ற பணிக்குழுவை உருவாக்கியது. இந்த குழு, அரசு செலவுகளை குறைப்பதற்கும், நிர்வாக அமைப்புகளை மறுசீரமைப்பதற்கும் பொறுப்பாக உள்ளது.

இந்த நிலையில் ட்ரம்ப் அரசு, 2026 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 107,000 அரசு ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது, இது ஏறக்குறைய 7% பணியாளர் குறைப்பாகும். இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு அல்லாத துறைகளில் கவனம் செலுத்துகின்றன. மேலும், USAID போன்ற பல அரசு திட்டங்களுக்கு நிதி முடக்கப்பட்டு, 83% திட்டங்கள் நிறுத்தப்பட்டு, மீதமுள்ளவை வெளியுறவுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டன. 

இதையும் படிங்க: NASA உயரதிகாரிகளுக்கு ஆப்பு! 2000 பேர் சீட்டு கிழிஞ்சது..! செலவை குறைக்க ட்ரம்ப் திட்டம்!

இந்த செலவு குறைப்பு முயற்சிகள், DOGE-இன் கூற்றுப்படி, 160 பில்லியன் டாலர் சேமிப்பை அளித்ததாகக் கூறப்பட்டாலும், இந்த எண்ணிக்கைகள் சரிபார்க்கப்படவில்லை. இருப்பினும், இந்த முயற்சிகளுக்கு மத்தியில், முதல் 100 நாட்களில் அரசு செலவு கடந்த ஆண்டை விட 200 பில்லியன் டாலர்கள் அதிகரித்ததாக CBS செய்தி தெரிவிக்கிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று ஒரே நாளில் 1,300 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது, இதில் 1,107 உள்நாட்டு அரசு ஊழியர்களும், 246 வெளியுறவுத்துறை அதிகாரிகளும் அடங்குவர். இது அவரது நிர்வாகத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கை, முந்தைய அரசின் நியமனங்களை அகற்றுவதற்கும், "MAGA" (Make America Great Again) தொலைநோக்குக்கு ஒத்துப்போகாதவர்களை நீக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த பணி நீக்கங்கள், அரசு துறைகளில் திறமையற்றவர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டவை எனக் கூறப்படுகிறது. இது, ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் "நிர்வாகத்தை சுத்தப்படுத்துதல்" (Drain the Swamp) என்ற முழக்கத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 1300 பேருக்கும் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணி நீக்கத்தை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அலுவலகங்களின் வெளியே போராட்டத்தில் குதித்தனர். நாட்டுக்காக உழைத்த தங்களுக்கு சீர்திருத்தம் என்ற பெயரில் அநீதி இழைக்கக்கூடாது. எங்களை இதுபோன்று நடத்தக்கூடாது என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க: குற்றவாளி நெதன்யாகுவை ஏன் அரஸ்ட் பண்ணல? இத்தாலி, பிரான்ஸ், கிரிஸ் நாடுகளுக்கு ஐ.நா நிருபர் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share