கிரீன்லாந்தை கைப்பற்றுவதை எதிர்ப்பவர்களுக்கு வரி விதிப்பேன்.. அமெரிக்காவின் ஆர்க்டிக் கனவு! டிரம்பின் அதிரடி மிரட்டல்!
கிரீன்லாந்தை கைப்பற்றுவதை எதிர்ப்பவர்கள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து உலக அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருந்தாலும் தன்னாட்சி உரிமை பெற்ற மிகப்பெரிய தீவு நாடான கிரீன்லாந்து, ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை ஆர்க்டிக் பகுதியில் தடுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கு கிரீன்லாந்து, டென்மார்க் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கிரீன்லாந்தை இணைப்பதற்கான மசோதா அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் சுகாதார பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம். இதை உடன்படாத நாடுகள் மீது நான் வரி விதிக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
இது போன்று டிரம்ப் அச்சுறுத்தியது இதுவே முதல் முறை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். கிரீன்லாந்திற்கான டிரம்பின் சிறப்பு தூதர் ஜெப் லாண்ட்ரி கூறியதாவது: “கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும். மார்ச் மாதம் கிரீன்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். அதிபர் டிரம்ப் ஆர்க்டிக் தீவை கையகப்படுத்துவது குறித்து மிகத் தீவிரமாக உள்ளார்.”
இதையும் படிங்க: டெல்லி கார் குண்டு வெடிப்பு!! ஆட்டத்தை சூடேற்றும் அமலாக்கத்துறை! ரூ.139 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்!
ஆர்க்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்தின் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக இந்த மிரட்டல் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் அரசு இதை “ஏற்றுக்கொள்ள முடியாத மிரட்டல்” என்று கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச உறவுகளை பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: அனுமதியின்றி மஞ்சுவிரட்டு…! பறிபோன உயிர்கள்..! சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்..!