பேச்சுவார்த்தை வெற்றி பெறலைனா அவ்ளோதான்! மோசமான நாளா மாறும்!! ஈரானுக்கு ட்ரம்ப் வெளிப்படையான மிரட்டல்!
ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை என்றால் ஈரானுக்கு அது மோசமான நாளாக மாறும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரானுக்கு அது மிக மோசமான நாளாக அமையும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் 47 ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதுவரை எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது: "47 ஆண்டுகளாக ஈரான் பேசிக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஒப்பந்தம் ஏதும் இல்லை. பேச்சு நடக்கும்போதே நாங்கள் பல உயிர்களை இழந்துவிட்டோம். விரைவில் மத்திய கிழக்குக்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை அனுப்ப இருக்கிறோம். ஒப்பந்தம் ஏற்படுமா என்று பார்க்கிறேன். பேச்சுவார்த்தை வெற்றி பெறாவிட்டால் ஈரானுக்கு அது மோசமான நாளாக மாறும். மிக மோசமானது."
டிரம்ப் மேலும் கூறினார்: "நாங்கள் உலக அமைதிக்காக உழைக்கிறோம். 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். இன்னும் இரண்டு போர்கள் உள்ளன - குறிப்பாக ரஷ்யா-உக்ரைன். இது பயங்கரமானது. எங்களிடம் உண்மையான படை உள்ளது.
இதையும் படிங்க: ஈரானை நோக்கி பயணிக்கும் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்கள்!! பயன்படுத்த வேணாம்னு பாக்குறேன் - ட்ரம்ப் மிரட்டல்!
ஈரானில் குண்டுவீச்சு தாக்குதல், வெனிசுலாவில் நடந்தது போல யாரும் பார்க்காத அளவுக்கு நடந்தது. வெனிசுலாவுடன் நல்ல உறவு உள்ளது. ஐரோப்பாவுடன் நன்றாக பழகுகிறோம். கிரீன்லாந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. பங்குசந்தை சாதனை படைக்கிறது."
இந்த எச்சரிக்கை ஈரானுடனான அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் வந்துள்ளது. ஓமனில் நடந்த மறைமுக பேச்சுகளுக்கு பிறகு அமெரிக்கா இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
USS Gerald R. Ford போன்ற இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் விரைவில் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படும் என்று டிரம்ப் உறுதிப்படுத்தினார். இது ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கை.
ஈரான் மீது இராணுவ நடவடிக்கை அல்லது பொருளாதார தடைகள் வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. டிரம்ப் ஆட்சியில் ஈரான் மீதான கடுமை தொடர்கிறது. ஒப்பந்தம் ஏற்பட்டால் அமைதி, இல்லையெனில் பெரும் பதற்றம் என்பது தெளிவாகிறது. மத்திய கிழக்கு அரசியல் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் சந்தேகம்!! குட்டையை குழப்பும் ட்ரம்ப்!! குழம்பி நிற்கும் இஸ்ரேல்!