×
 

15 நாள்தான் டைம்! மோசமான விளைவுகள் காத்திருக்கு! ஜாக்கிரதை! ஈரானுக்கு கெடு விதித்தார் அதிபர் ட்ரம்ப்!

அணுசக்தி திட்டம் குறித்து ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ஈரானுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், 15 நாட்கள் கெடு விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அணுசக்தி திட்டம் குறித்து உடன்பாடு ஏற்படாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் அறிவித்துள்ளார். இதற்கு 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இந்த அறிவிப்பு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம் (JCPOA) ஏற்படுத்தப்பட்டது. இது ஈரானின் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 

ஆனால், 2017இல் அதிபரான டிரம்ப், 2018இல் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். 'இந்த ஒப்பந்தம் பயனற்றது' என கூறி, ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். இது இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்தது.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தை வெற்றி பெறலைனா அவ்ளோதான்! மோசமான நாளா மாறும்!! ஈரானுக்கு ட்ரம்ப் வெளிப்படையான மிரட்டல்!

இப்போது, இரண்டாவது முறையாக அதிபரான டிரம்ப், ஈரானுடன் புதிய ஒப்பந்தம் செய்ய முயல்கிறார். கூடுதல் நிபந்தனைகளுடன் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்த விரும்புகிறார். வாஷிங்டனில் நடந்த காசா அமைதி வாரிய கூட்டத்தில் பேசிய டிரம்ப், "ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை நன்றாக நடக்கிறது. 

ஆனால், அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை விரைவில் எட்ட வேண்டும். இல்லையெனில், மோசமான விளைவுகள் ஏற்படும். கடந்த ஆண்டு ஜூனில் அமெரிக்க வான் தாக்குதலால் ஈரானின் அணு திறன் அழிக்கப்பட்டது. இதை மேலும் தீவிரப்படுத்துவது ஈரான் கையில் உள்ளது. அடுத்த 10 நாட்களில் இது தெரியவரும். ஒப்பந்தத்துக்கு 10-15 நாட்கள் போதும்" என்றார்.

இதற்கு பதிலளித்த ஈரான், ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் அண்டானியோ குட்டரெசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. "நாங்கள் எந்த போரையும் தொடங்க மாட்டோம். ஆனால், ராணுவ ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், தற்காப்பு உரிமையை பயன்படுத்தி பதிலடி கொடுப்போம்" என கூறியுள்ளது. இதனிடையே, ஓமன் கடற்பகுதியில் நடந்த ஈரானிய கடற்படை பயிற்சியில் ரஷ்ய போர் கப்பல் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவுக்கு சவாலாக அமைந்துள்ளது.

இந்த பதற்றம் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. எண்ணெய் விலை உயர்வு, வர்த்தக பாதிப்பு போன்றவை ஏற்படலாம். ஈரான் அணுசக்தி திட்டம் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ளது. டிரம்பின் இந்த எச்சரிக்கை, புதிய போர் அச்சத்தை தூண்டியுள்ளது. 

இதையும் படிங்க: ஈரானை நோக்கி பயணிக்கும் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்கள்!! பயன்படுத்த வேணாம்னு பாக்குறேன் - ட்ரம்ப் மிரட்டல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share