×
 

கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடா? ஆதாரத்துடன் அமுதா IAS கொடுத்த விளக்கம்..!

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அமுதா IAS விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கரூர் சம்பவம், 2025 செப்டம்பர் 27 அன்று நிகழ்ந்தது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் மற்றும் நடிகர் விஜய் நடத்திய அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விஜயின் பிரச்சாரத்திற்கு 10,000 பேர் என்று எதிர்பார்த்த கூட்டம் 27,000-ஐத் தாண்டியது. விஜய்யின் பேச்சின் போது, திடீர் நெரிசல் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவாகி இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், மதியழகன் கைது செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து தவெக நிர்வாகி பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவருக்கும் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. 

கரூர் சம்பவம் குறித்து விஜய் இன்று மவுனம் கலைத்தார். இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அமுதா IAS விளக்கம் கொடுத்தார். தவெக பிரச்சாரத்திற்கு 20 பேருக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் கூடுதலாகவே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறினார். தவெக தலைவரின் வருகையின் போது கூடவே மிகப்பெரிய கூட்டம் வந்துவிடுகிறது என்றும் தெரிவித்தார். 50 பேருக்கு ஒரு போலீசார் என ஒதுக்கப்படும் நிலையில் இந்த விவகாரத்தில் 10,000 பேருக்கு 500 என கூடுதலாகவே நியமித்தோம் என்றும் முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: #BREAKING: என்னை பழிவாங்குங்கள்… ஆனா…! கரூர் சம்பவம் குறித்து வாய் திறந்த விஜய்…!

விஜய் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்களின் வீடியோ தொகுப்பும், விஜய் பரப்புரையின் போது விதிமுறைகள் மீறப்பட்டதற்கான வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: முடிவு வரட்டும்... அப்ப இருக்கு... கரூர் சம்பவம் குறித்து பொன்முடி ஆவேசம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share