தமிழகமே பேரதிர்ச்சி...!! - தவெக நிர்வாகி தீக்குளிப்பு... விஜய் ஆட்சி அமைக்காத முடியாத விரக்தியில் விபரீதம்...!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றிய போதும் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருவது அவரது தொண்டர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும், இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க உஷார் நிலையில் இருக்கும் படி உளவுத்துறையே ரிப்போர்ட் கொடுத்துள்ளது. நேற்று வரை விஜய் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை மட்டுமே சிக்கலாக இருந்த நிலையில், தற்போது குதிரை பேரம் நடத்துகிறார் என்ற புகார் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நேற்று இரண்டு முறை ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது, தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் 121 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிய கடிதமும் ஆளுநரிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஒருவர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒருவரின் ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே இதுவரை அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்துள்ளன.
அதேசமயம், அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜின் ஆதரவு கடிதம் போலியானது என டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார். அவர், காமராஜுடன் நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று விளக்கக் கடிதம் வழங்கியதுடன், கிண்டி காவல் நிலையம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரில், “குதிரைப் பேரம் நடத்தி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி நடைபெறுகிறது” என்று குற்றம்சாட்டிய தினகரன், ஆதரவு கடிதம் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து பேசிய காமராஜ், “நான் எந்த ஆதரவு கடிதமும் வழங்கவில்லை. நான் இன்னும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கே எனது ஆதரவு தொடர்கிறது” என்றார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!
மேலும் தவெக தரப்பில் இருந்து அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டதாக வெளியிட்ட வீடியோ போலியானது என டிடிவி தினகரன் அடுத்த குண்டை தூக்கிப் போட்டுள்ளதால், விஜய் ஆட்சி அமைப்பதில் அடுத்தடுத்து பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால் கடும் மன உளைச்சலில் உள்ள தவெக தொண்டர்கள் தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே புதுமனை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த விஜயின் தீவிர ரசிகரும், கூலித் தொழிலாளியுமான இசக்கியப்பன் என்பவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த இசக்கியப்பன் இன்று காலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இசக்கி முத்துவை மீட்டு நாகர்கோவில் அரசு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இசக்கி முத்து தீக்குளித்ததற்கான காரணம் குறித்து கூடங்குளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கு முயன்ற இசக்கியப்பன் தவெகவில் வள்ளியூர் ஒன்றிய தொண்டரணி இணை அமைப்பாளராக உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட வேலை அலகாகக் குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தித் தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமா. எப்போ வருவாரு..? ஆதரவு தருவாரு..? “ 4 மணிக்கு” விசிக வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!