பெரம்பலூர் மக்களே மறுபடியும் வருவேன்... எனக்கு ரொம்ப வருத்தம்! - விஜய்
பெரம்பலூர் மக்களை சந்திக்க வேண்டும் வருவேன் என விஜய் உறுதிப்பட கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றினார். இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் தனது அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றின் திருப்புமுனையாக அலைகடலென மக்கள் குவிந்தனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடாமல் போனது. திருச்சியை தொடர்ந்து அரியலூரில் மக்கள் மத்தியில் விதை உரை நிகழ்த்தினார். விஜயை காணும் பூரிப்பில் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர். விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரியலூரில் தொடர்ந்து பெரம்பலூரில் விஜய் பிரச்சார மேற்கொள்ள இருந்தார். ஆனால் பிரச்சார வாகனமே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பெரம்பலூரை ஸ்தம்பித்து போகும் நிலையில் கூட்டம் கூடியது. இதனால் விஜய் தனது பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.
இதையும் படிங்க: எவ்ளோ ஆசையா இருந்தோம்? இப்படி பண்ணிட்டாங்களே! விரக்தியில் தவெக தொண்டர்கள்...
இதனால் விஜயை காண பெரம்பலூரில் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பெரம்பலூர் மக்களை மீண்டும் சந்திக்க வருவேன் என்று விஜய் கூறியுள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி என்று கூறினார். இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குவதாக தெரிவித்தார்.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது என்றும் பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் என்றும் விஜய் கூறினார்.
இதையும் படிங்க: BRO! அரசியல் SATURDAY பார்ட்டி இல்ல… 24×7 DUTY… வைரலாகும் போஸ்டர்கள்