என்னப்பா ஆச்சு..? திருச்சியில் போலீஸ் வாகனம் மோதி கீழே விழுந்த நபர்... பதறி ஓடிய விஜய்..!!
திருச்சியில் விஜய் வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்றபோது போலீஸ் வாகனம் மோது இளைஞர் ஒருவர் கீழே விழுந்த நிலையில் விஜய் நலம் விசாரித்தார்.
விஜய் பரப்புரை வாகனம் சென்றபோது போலீஸ் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் பைக்கில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த விஜய் உடனடியாக தனது பரப்புரை வாகனத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்று அந்த இளைஞரை நலம் விசாரித்தார். காயங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விஜய் கேட்டு ஆறுதல் கூறினார்.
இதனால் அப்பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. அன்றைய தினமே பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விஜய் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் போட்டியிடும் நிலையில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சிக்கு சென்றடைந்தார். அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பரப்புரை வாகனத்தில் மக்களை சந்தித்தவாறு சென்றார். விஜய்க்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வழி நெடுகிலும் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில், திருச்சி மேலப்புதூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பார்க்க தொண்டர்கள் திரண்டனர்.
இதையும் படிங்க: வாய ஒடச்சிடுவேன்..! விஜயை விமர்சித்த நபர்..!! துரத்திச் சென்று லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்..!!
அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது போலீஸ் வாகனம் மோதியுள்ளது. பைக் மீது போலீஸ் வாகனம் ஓதியதில் இளைஞர் ஒருவர் கீழே விழுந்துள்ளார். பைக்கில் இருந்து இளைஞர் கீழே விழுந்ததை பார்த்த விஜய் உடனடியாக தனது பரப்புரை வாகனத்தில் இருந்து கீழே இறங்கி சென்றார். இளைஞருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து விஜய் நலம் விசாரித்தார். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: விசில் போடு..! நெருங்கும் தேர்தல்... திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் விஜய்..!!