×
 

போர் பதற்றம்..!! ஈரானை ரவுண்டுகட்டிய அமெரிக்கா..!! இராணுவத்தை குவிக்கும் டிரம்ப்..!!

ஈரானை தொடர்ந்து மிரட்டி வரும் டிரம்ப், தற்போது ஈரானை சுற்றிய இடங்களில் உள்ள விமானப்படை தளத்தில் போர் விமானங்களை குவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். ஈரான் அருகே போர் விமானங்கள், விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட இராணுவ வாகனங்களை குவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. ஈரான் தரப்பில், அமெரிக்காவின் எந்த தாக்குதலையும் போராக கருதி பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான்-அமெரிக்கா இடையே நீண்டகால பகைமை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அந்நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்களை குண்டுவீசி தாக்கியது. இதன்பின் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது ஈரானில் உள்நாட்டு அமைதியின்மை நிலவுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இதையும் படிங்க: விளைவுகள் பேரழிவை தரும்! அமெரிக்காவை எச்சரிக்கும் கத்தார்; அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவற்றின் பின்னணியில் இந்த நாடுகள் இருக்கலாம் என ஈரான் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஈரான் போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இந்த உள்நாட்டு கலவரத்தை வைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி வருகிறது.அமெரிக்காவின் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல், டோமஹாக் ஏவுகணைகளுடன் கூடிய மூன்று தாக்குதல் போர்க்கப்பல்கள் ஈரான் அருகே அனுப்பப்பட்டுள்ளன. இந்த USS ஆபிரகாம் லிங்கன் கப்பலில் F-35C மற்றும் F/A-18 போர் விமானங்கள் உள்ளன. மேலும், ஜோர்டான் நாட்டில் உள்ள பிரிட்டன் சொந்தமான விமானப்படை தளத்தில் F-15E Strike Eagle எனும் 12 போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது. 

இவைதான் கடந்த ஆண்டு ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கியவை. இதுதவிர, வானிலேயே எரிபொருள் நிரப்பும் KC-135 aerial refuellers, C-130 கார்கோ விமானங்கள் போன்றவையும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. ஈரான் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் நாட்டின் மீதான எந்த தாக்குதலும் முழுமையான போராக கருதப்படும். டிரம்பின் இராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள எங்கள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சி உறுதியுடன் உள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்" என்றார். இதனால் ஈரானில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஈரான் தரப்பும் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. இந்த சூழல் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியை பாதிக்கும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


 

இதையும் படிங்க: ரத்த காடாக மாறும் ஈரான்! 2 நாளில் 2,000 பேர் பலி; முடங்கிய இணையத்தால் உலகிற்கு தெரியாத கொடூரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share