×
 

ஒரே வாரத்தில் 25% வாக்காளர்கள் நீக்கம்... திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு...!

தமிழகத்தில் ஒரே வாரத்தில் 25 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக சென்னை தங்கச்சாலையில் திமுக கூட்டணி சார்பில் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தல் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். 

அப்போது அவர் பேசியதாவது: சிறுபான்மையினரும்,உழைக்கும் வர்க்கமும், ஏழை மக்களும் இடதுசாரிகள், திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் போன்ற இந்த கட்சிகளையே 90% ஆதரிக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்குமான வாக்குரிமையை பறித்துவிட்டால் இந்த இயக்கங்கள் எதிர்காலத்தில் வீரியத்தோடு செயல்படமுடியாமல் போய்விடும். மீண்டும் காங்கிரஸ் புத்துணர்ச்சி பெற்று ஆட்சிக்கு வர முடியமால் தடுத்து விட முடியும். 

இந்துக்கள் மட்டுமே அதுவும் மதவாத சக்திகள் மட்டுமே பெரும்பான்மையானவர்களாக கணிசமான வாக்காளர்களாக மாறுகிற போது இந்திய அரசமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு அவர்கள் விரும்புகிற மதச்சார்புள்ள ஒரு தேசத்தை கட்டமைக்க போகிறார்கள். கோல் வாக்கரின் கனவை நனவாக்க வேண்டுமானால், ஹெட்கேவாரின் கனவை நனவாக்க வேண்டுமானால், வீரசாவர்க்கரின் கனவை நனவாக்க வேண்டுமானால் இதை பாஜக செய்யத துணிந்துள்ளது. 

இதையும் படிங்க: CAA தான் அவங்க நோக்கம்..! இது தேர்தல் ஆணையத்தின் வேலையா? வெளுத்து வாங்கிய திருமா...!

தமிழகத்தை திமுக, கேரளாவில் கம்யூனிஸ்ட், மேற்கு வங்கத்தில் மம்தா பான்ஜி, கர்நாடகாவிலே காங்கிரஸ், தெலுங்கானாவிலே காங்கிரஸ், பீகாரிலே ஆர்ஜேடி வர வாய்ப்பு இருக்கிறது. உத்தர பிரதேசத்தில அகிலேஷ் யாதவ் வர வாய்ப்பு இருக்கிறது. இப்படி மாநிலங்களில் பிஜேபி அல்லாத பிற கட்சிகளின் ஆட்சி இருக்கிறபோது. 

இந்தக் கட்சிகள் எல்லாம், சிஏ போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துதற்கும், இந்திய அரசமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு இந்து ராஷ்டிரா என்று அவர்கள் விரும்புகிற ஒரு தேசத்தை அறிவிப்பதற்கும், மதச்சார்பே எங்கள் கோட்பாடு அதுதான் அரசமைப்புச் சட்டத்தின் உயிர் மூச்சு என்ற கோட்பாட்டை அறிவிப்பதற்கும் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. 

அப்படி தடை இல்லாத ஒரு சூழலை, தேசத்தை உருவாக்க வேண்டுமானால் SIR அவர்களுக்கு தேவைப்படுகிறது. நேஷனல் ரிஜிஸ்டர் ஆப் சிட்டிசன்ஸ் அதற்கான ஒரு நடவடிக்கையாகத்தான் தேர்தல் ஆணயத்தை பயன்படுத்தி மேற்கொள்கிறார்கள். 

இந்த தேர்தலில் தற்காலிகமாக அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும் அது அவர்களுக்கு பிரச்சனை இல்லை. மாநில தேர்தல்களில் பாஜகவிற்கு ஏற்படுகிற தோல்வி அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனாலும் மாநிலங்களிலும் அவர்கள் வேரூன்ற வேண்டும். மதவாத அரசியலை .வளர்த்து எடுக்க வேண்டும். மதம் சார்ந்த சக்திகளை மேம்படுத்த வேண்டும். அதற்கு சாதி வெறியர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சாதி அரசியல் பேசக்கூடியவர்களை வளர்த்து எடுக்க வேண்டும். அதற்காக கோடி கோடியாய் கொட்டி இறைக்கிறார்கள். 

சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். கூலி கும்பலை ஏவுகிறார்கள். திராவிட அரசியலை வெகுஜன மக்களுக்கு எதிரான அரசியல் என்று பரப்புகிறார்கள். பெரியாரையே கன்னடர் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். இவையெல்லாம் அந்த நடவடிக்கைகளின் ஒவ்வொரு அங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது. 

கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிறார்கள்.காங்கிரஸ் இல்லாத பாரதம் என்கிறார்கள். இடதுசாரிகளே எங்கள் முதன்மை எதிரிகள் என்கிறார்கள். இந்த முழக்கங்கள் எல்லாம் எந்த பின்னணியில் இருந்து வருகின்றன? ஏன் பிஜேபியை நாம் எதிர்க்க வேண்டும். அவர்கள் சராசரி அரசியல் கட்சி அல்ல. வெறும் மக்களுக்கு தொண்டு செய்வதற்கும், ஆட்சி அதிகாரத்திற்கு வந்து பதவி சுகத்தை அனுபவிப்பதற்கும் உருவான கட்சி அல்ல. அவர்கள் இந்தியாவை அவர்கள் விரும்புகிறபடி மாற்றி அமைப்பதற்கு புதுப்பித்து கட்டுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பாசிச இயக்கம். மிக மிக ஆபத்தான ஒரு இயக்கம். 

திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டுபாஜகவை தோளில் தூக்கி சுமக்கிறார்கள் என்று சொன்னால் அவர்கள், பெரியாருக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதை விட மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள். மன்னிக்க முடியாத குற்றத்தை இழைக்கிறார்கள் என்றுதான் பொருள். எனவேதான் பெரியாரின் மடியில் வளர்ந்தவர் அண்ணாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் அந்த பொறுப்புணர்வோடு தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை தொலைநோக்கு பார்வையோடு வழிநடத்துகிறார் . இந்த புரிதலோடு தான் நாங்கள் திமுகவுடன் கைகோர்த்து நிற்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியதில் இருந்து ஒரே வாரத்தில் 25 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.  மேலும் இந்த எஸ்ஐ ஆர் பணிகள் மூலமாக ஆர் எஸ் எஸ் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க பார்ப்பதாகவும் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலினை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு?... விஜயை வெளுத்து வாங்கிய விசிக ரவிக்குமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share