×
 

புருஷனை சுட்டுக் கொன்றவர்களுக்கு வக்காலத்து... புத்தி கெட்டுப்போனாரா புல்லட் லவ்வர்..? வலுக்கும் எதிர்ப்பு..!

வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வாலின் பேச்சு பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

பஹல்காம் தாக்குதலின் போது லெப்டினன்ட் ஜெனரல் வினய் நர்வால் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். திருமணமான ஆறாவது நாளில், அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் விதவையானார். வினய் நர்வாலின் மதத்தை உறுதி செய்த பிறகு பயங்கரவாதிகள் அவரைக் கொன்றனர். இது இந்தியாவில் இந்து-முஸ்லிம் விவாதமாக மிகவும் தீவிரமாகியது. 

இந்நிலையில், வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வாலின் பேச்சு பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு, ''முஸ்லிம்களையும், காஷ்மீரிகளையும் குறிவைக்க வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது கடும் விவாதமாக மாறியுள்ளது.

24 வயதான ஹிமான்ஷி நர்வால் முனைவர் பட்டாதாரி. ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்தவர். ஹிமான்ஷியின் தந்தை சுனில் குமார் குருகிராமில் கலால், வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரது தாயார் பூனம் ஒரு இல்லத்தரசி. ஹிமான்ஷி நர்வால் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக பதிவிட்டு வருபவர். அவர் தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் 'புல்லட் லவ்வர் மற்றும் 'எனது முதல் காதல் என் அம்மா' என்று தொடர்ந்து பதிவிடுகிறார்.

இதையும் படிங்க: இதை நாங்கள் விரும்பவில்லை; அமைதி வேண்டும்.. ஹிமான்ஷி கருத்தால் பரபரப்பு!!

மே 1 அன்று, அவரது கணவர் வினய் நர்வாலின் பிறந்தநாளில், ஹிமான்ஷியும், அவரது குடும்பத்தினரும் கர்னாலில் ஒரு இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தனர். அதில் அவர் தனது கணவரின் நினைவாக இரத்த தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, ​​ஹிமான்ஷி தனது கணவரின் பெயரின் மெஹந்தியை தனது கைகளில் பூசிக்கொண்டு மேடையில் அவருக்கு உணர்ச்சிபூர்வமான அஞ்சலி செலுத்தினார். 

சமூகப் பணிகள், அமைதி  மூலம் தனது கணவரின் கொள்கைகளை அவரது நினைவாக முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஹிமான்ஷி தெரிவித்தார். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களையும், முஸ்லிம்களையும் குறிவைக்க வேண்டாம்'' என்று ஹிமான்ஷி மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், சமூக ஊடகங்களில் அவர் குறிவைக்கப்பட்டுள்ளார். வினய் நர்வாலின் தந்தை, தனது மகனுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், அவரது பெயரில் ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானை அலங்கோலப்படுத்துவோம்... மோடியுடன் கைகோர்த்த அங்கோலா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share