20 அடுக்கு மாடிகள்; 70 உணவகங்கள்... நடுக்கடலில் மிதக்கும் பிரம்மாண்ட சொர்க்கம் பற்றி தெரியுமா?
ராயல் கரீபியனின் ஸ்டார் ஆஃப் தி சீஸ் பயணக் கப்பல் தற்போது ஒட்டுமொத்த இணையவாசிகளின் தேடலாக மாறியுள்ளது. சுமார் 2 லட்சத்து 24 ஆயிரம் டன்களுக்கு மேல் எடையுள்ள இந்த “ஸ்டார் ஆப் தி சீஸ்” உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பலாகும்.
ராயல் கரீபியனின் ஸ்டார் ஆஃப் தி சீஸ் பயணக் கப்பல் தற்போது ஒட்டுமொத்த இணையவாசிகளின் தேடலாக மாறியுள்ளது. சுமார் 2 லட்சத்து 24 ஆயிரம் டன்களுக்கு மேல் எடையுள்ள இந்த “ஸ்டார் ஆப் தி சீஸ்” உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பலாகும்.
20 தளங்களைக் கொண்ட இந்தக் கப்பலில் இருவர் தங்கக்கூடிய வகையிலான அறைகளில் மொத்தம் 5,610 பயணிகள் தங்கலாம். 2,350 பணியாளர்கள் இந்த கப்பலில் பணியாற்றுகிறார்கள். ஆக மொத்தம் இந்த கப்பளின் முழு கொள்ளளவு 7000க்கும் அதிகமானது.
இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலில் ஏழு நீச்சல் குளங்கள், ஆறு நீர்ச்சறுக்கு தளங்கள், ஒரு பனிச்சறுக்கு தளம், லேசர் டேக், ஒரு தப்பிக்கும் அறை, ஒரு சர்ஃப் சிமுலேட்டர் மற்றும் சகச விளையாட்டுகள் நிறைந்த கிரவுன்ஸ் எட்ஜ் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. புதிய லிங்கன் பார்க் சப்பர் கிளப் உட்பட 40க்கும் மேற்பட்ட பார் மற்றும் ரெஸ்ட்ராண்ட்கள் உள்ளன.
இதையும் படிங்க: பைக்கில் அப்பாவுடன் ஜாலியாக பயணித்த 2 மகள்கள்.. அதிவேகத்தில் எமனாக வந்த சொகுசு கார்... !
மேலும் இந்த கப்பலுக்குள் 82 அடி உயரமும், 164 அடி அகலமும் கொண்ட அக்வாடோம் என்ற பகுதி முழுக்க முழுக்க கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உந்துவிசை, தரையில் இருக்கும் போது கரை மின்சார சக்தி மற்றும் கழிவு-வெப்ப மீட்பு அமைப்புகளுடன் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் பயணிகளுடம் தனது முதல் பயணத்தை தொடங்கிய இந்த கப்பலானது உலகிலேயே 2வது பரபரப்பான துறைமுகமான போர்ட் கனாவெரலில் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது. ராயல் கரீபியனின் ஐகான் வகுப்பின் இரண்டாவது கப்பல் பயணம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடக்கவுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு வார பயண திட்டமாக இது வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனக்கு ராக்கி கட்டிய 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வக்கிர மிருகம்... அடுத்தடுத்து செய்த கொடூரம்...!