அரசு ஊழியர்களை அலறவிட்ட யோகி! 68,000 பேர் சம்பளம் அதிரடியாக ‛கட்’! உ.பி.யில் பரபரப்பு!!
சொத்து விவரம் தாக்கல் செய்ய ஜனவரி 31 வரை அவகாம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிந்தும் நிறைய ஊழியர்கள் சொத்து விவரத்தை தாக்கல் செய்யவில்லை.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்போது இந்த உத்தரவை மீறிய ஊழியர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோகி அரசு “மானவ் சம்பதா” என்ற இணையதளத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் அசையும் சொத்துக்கள் (வங்கி வைப்பு, வாகனம், தங்கம் போன்றவை) மற்றும் அசையா சொத்துக்கள் (நிலம், வீடு, கட்டடம் போன்றவை) விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்கு ஜனவரி 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் பலர் இந்த காலக்கெடுவை மீறியுள்ளனர்.
ஆய்வில் தெரிய வந்தது: மொத்தம் 68,000 அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, கல்வி துறை, சுகாதாரத் துறை ஊழியர்கள் அதிகம் உள்ளனர். இதனால் யோகி அரசு உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் வரை இவர்களின் சம்பளத்தை முழுமையாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குவாரிகளால் அழியும் கிராமங்கள்!! முகமூடியுடன் வந்த வீரர்கள்!! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை!
சம்பளம் நிறுத்தப்பட்ட ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை மானவ் சம்பதா இணையதளத்தில் பதிவு செய்த பிறகு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது என்று உத்தரப்பிரதேச தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கை ஊழலுக்கு எதிரான யோகி அரசின் உறுதியை மீண்டும் நிரூபித்துள்ளது. அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை மறைத்தால், அது ஊழல் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. யோகி ஆட்சியில் ஊழல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கமாகி வருகிறது.
தமிழகத்தில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். “தமிழகத்துக்கும் யோகி மாடல் ஆட்சி தேவை” என்று பலர் குரல் எழுப்பி வருகின்றனர். அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை கண்காணிப்பது, ஊழலை கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழி என்று பாஜக தரப்பு வாதிடுகிறது. திமுக அரசு இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுக்காததால், மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
யோகி அரசின் இந்த அதிரடி நடவடிக்கை உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகள் எந்த அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. தமிழகத்தில் இதுபோன்ற மாடல் அமல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் தேர்தல் வாக்குறுதி என்ன? தவெக தேர்தல் அறிக்கை!! தென் மாவட்டங்களில் இருந்து ஆட்டம் ஆரம்பம்!!