×
 

உக்ரைன் - ரஷ்யா போர் தொடர இந்தியாவே காரணம்!! டிரம்ப் ஆலோசகர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

ரஷ்யா– உக்ரைன் போரில் அமைதிக்கான பாதை இந்தியா வழியாவே செல்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்த ஆலோசகர் பீட்டர் நவரோ கூறினார்.

அமெரிக்காவோட வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இந்தியா மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை வீசியிருக்காரு. “ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குறதால, இந்தியாதான் உக்ரைன்-ரஷியா போரை நீடிக்க வைக்குது”னு சொல்லி, உலக அரசியல் களத்துல பரபரப்பை கிளப்பியிருக்காரு. இந்தியா மீது அமெரிக்கா விதிச்ச 50% வரி, ஆகஸ்ட் 27-ல இருந்து அமலுக்கு வருது. இதுக்கு பதிலா, இந்தியா தன்னோட ரஷிய எண்ணெய் வாங்குதலை நிறுத்தணும்னு நவரோ கண்டிஷன் போட்டிருக்காரு.

நவரோ, பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதின ஒரு கட்டுரையில, “இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரிச்சு ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியாவுக்கு ஏற்றுமதி பண்ணி பெரிய லாபம் பார்க்குது. இது ரஷியாவோட போர் பொருளாதாரத்துக்கு உதவுது”னு குற்றம்சாட்டியிருக்காரு. 

இவரோட பேச்சு, “இந்தியா அமெரிக்காவுக்கு பொருட்கள் வித்து பணம் சம்பாதிச்சு, அதை வச்சு ரஷியாவுக்கு எண்ணெய் வாங்குறதுக்கு பயன்படுத்துது. ரஷியா அந்த பணத்தை ஆயுதங்களுக்கு பயன்படுத்தி உக்ரைனை தாக்குது. இதனால, அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் உதவி செய்ய வேண்டியதா இருக்கு”னு வெளிப்படையா குறை சொல்ற மாதிரி இருக்கு.

இதையும் படிங்க: அமெரிக்கா வரிவிதிப்பு விவகாரம்!! இந்தியாவுக்கு துணை நிற்கும் சீனா!! போட்டியாளர்கள் அல்ல கூட்டாளிகள்!!

2022-ல உக்ரைன் போர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, இந்தியாவோட மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷிய எண்ணெய் 1% கூட இல்ல. ஆனா, இப்போ 35-40% ரஷியாவிடம் இருந்து வாங்குறோம். இதை நவரோ, “இந்தியாவோட உள்நாட்டு தேவைக்காக இல்ல, பெரிய எண்ணெய் நிறுவனங்கள் லாபம் தேடுறதுக்காக”னு குற்றம்சாட்டுறாரு. 

“இந்தியா, கிரெம்ளினுக்கு ஒரு பண சலவை இயந்திரமா (laundromat) மாறியிருக்கு”னு கடுமையா விமர்சிச்சிருக்காரு. ஆனா, இந்திய வெளியுறவு அமைச்சகம், “போர் ஆரம்பிச்சதுக்கு பிறகு, ஐரோப்பாவுக்கு செல்ல வேண்டிய எண்ணெய் திசை மாறியதால, இந்தியா ரஷியாவை நோக்கி திரும்புச்சு. இது உலக எண்ணெய் விலையை நிலையாக வைக்க உதவியது”னு பதில் சொல்லியிருக்கு.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “அமெரிக்காவே ஆரம்பத்துல இந்தியாவை ரஷிய எண்ணெய் வாங்க சொன்னது. இப்போ இந்தியாவை மட்டும் குறை சொல்றது நியாயமில்ல”னு காட்டமா பதிலடி கொடுத்திருக்காரு. இதோட, சீனா ரஷியாவிடம் இருந்து இந்தியாவை விட அதிகமா எண்ணெய் வாங்குது, ஆனா அவங்களுக்கு இந்த மாதிரி தண்டனை இல்லனு விமர்சகர்கள் சொல்றாங்க. உதாரணமா, சீனா 47% ரஷிய எண்ணெயை வாங்குது, ஆனா அமெரிக்கா இந்தியாவை மட்டும் டார்கெட் பண்ணுது.

நவரோ, “நான் இந்தியாவை நேசிக்கிறேன், மோடி சிறந்த தலைவர், ஆனா இந்தியா அமைதிக்கு உதவாம, போரை நீடிக்க வைக்குது”னு பேசியிருக்காரு. இதுக்கு பதிலா, இந்தியா சீனாவோட உறவை பலப்படுத்தி, BRICS, G20 மாதிரியான அமைப்புகளில் இணைஞ்சு, அமெரிக்காவோட அழுத்தங்களை எதிர்க்க தயாராகுது. மோடி, இந்த மாசம் இறுதியில சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க பெய்ஜிங் போறாரு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு வராரு.

இந்த 50% வரி, இந்தியாவோட ஜவுளி, மருந்து, நகை ஏற்றுமதியை பாதிக்கும். ஆனா, ரஷியாவோட 5% தள்ளுபடி எண்ணெய் ஒப்பந்தமும், சீனாவோட ஆதரவும் இந்தியாவுக்கு பொருளாதார பலத்தை கொடுக்குது. இந்த விவகாரம், இந்தியா-அமெரிக்கா உறவுல பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.

இதையும் படிங்க: ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்க சொன்னதே அமெரிக்காதான்!! இப்போ மாத்தி பேசுறாங்க!! ஜெய்சங்கர் சுளீர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share