பாக். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..! உமர் அப்துல்லா அறிவிப்பு..!
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அம்மா மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பகல் காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலையில் வருகிறது. பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
காஷ்மீர் எல்லையோர பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் முக்கிய இடங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: 5 முக்கிய தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..! பகல்காம் தாக்குதலுக்கு பழிக்குப்பழி..!
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு பதிலடி.. சுக்கு நூறாகிய சர்கோதா விமானப்படை தளம்.. இந்தியா அதிரடி..!