ஏழுமலையானை பழிச்சா சும்மா விடமாட்டேன்!! என் உயிரை காப்பாத்திய கடவுள்!! சந்திரபாபு நாயுடு உருக்கம்!
யாரும் ஏழுமலையானை அவதூறு செய்ய நான் விடமாட்டேன். 2003-ம் ஆண்டு திருப்பதி குண்டுவெடிப்பில் என் உயிரை காப்பாற்றியவர் ஏழுமலையான்” என்று சந்திரபாபு உருக்கமாக தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் வெங்கடபாலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி (ஏழுமலையான்) கோவிலை ரூ.260 கோடி செலவில் பிரம்மாண்டமாக விரிவுபடுத்தும் பணிகளுக்கு முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு நேற்று (நவம்பர் 27, 2025) அடிக்கல் நாட்டினார்.
2-வது பிரகாரம், 7 மாடி மகாராஜா கோபுரம், மூன்று கோபுரங்கள், ஆர்ஜித சேவை மண்டபம், வாகன ரத மண்டபம், பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, புஷ்கரணி உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுமானங்கள் அடங்கிய இந்தத் திட்டம் 2 ஆண்டுகளில் முழுமையாக நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசினார். “நான் சிறு வயதிலிருந்தே ஏழுமலையானை வணங்கி வருபவன். முதலமைச்சராக இல்லாமல், சாதாரண பக்தனாக வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்வேன். அங்கு நான் முதலமைச்சர் அல்ல, ஏழுமலையானின் அடிமை” என்று கண் கலங்க பேசினார்.
இதையும் படிங்க: களமாட தயார்... தேர்தல் பணி மும்முரம்... பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை உயர்த்த தவெக முடிவு..!
மேலும் அவர், “தவறு செய்தவர்கள் அடுத்த பிறவியில் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஏழுமலையான் இந்தப் பிறவியிலேயே தண்டிப்பார். யாரும் ஏழுமலையானை அவதூறு செய்ய நான் விடமாட்டேன். 2003-ம் ஆண்டு திருப்பதி குண்டுவெடிப்பில் என் உயிரை காப்பாற்றியவர் ஏழுமலையான்” என்று உருக்கமாக தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்திய சந்திரபாபு, “மும்பையில் ரூ.100 கோடி செலவில் ஏழுமலையான் கோவில் கட்ட ரேமன்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. இதேபோல் அனைத்து மாநிலங்களிலும் பக்தர்கள் முன்வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
ஏற்கெனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதியாக அமைந்துள்ள வெங்கடபாலம் கோவில், ஆந்திர மக்களின் மிக முக்கிய ஆன்மிக மையமாக விளங்குகிறது. இந்த விரிவாக்கத்தால் இன்னும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் நேரில் அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து திட்டத்தைத் தொடங்கி வைத்தது, ஆந்திரா முழுவதும் பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கண் முன்னே மூச்சுத் திணறும்!! எப்படி மௌனமா இருக்கீங்க!! மோடியை தோலுறிக்கும் ராகுல்காந்தி!