×
 

உத்தரகாண்டில் சோகம்..! மலையில் விழுந்து சுக்குநூறான ஹெலிகாப்டர்.. பெண் உள்பட 6 பக்தர்கள் பலி..!

உத்தரகாசி மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கியதில் பெண் உள்பட 6 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி கோயிலுக்கு இன்று காலை ஒரு பெண் உள்பட 5 பக்தர்கள் ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். ஹெலிகாப்டரை 60வயதுள்ள விமானி ராபின் சிங் இயக்கினார். இன்று காலையில் ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பஹிரதி நதிப்பகுதியில்  உள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. 

மாநில பேரிடர் மீட்புப்படையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் இருக்கும் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய இராணுவம் இறக்கிய ஹெலிகாப்டர்கள்... பாதாளம் வரை தேடப்படும் பயங்கரவாதிகள்..!

இந்த ஹெலிகாப்டர் விடி-ஓஎஸ்எப் வகையைச் சேர்ந்த ஏரோடிரான்ஸ் சர்வீசஸுக்கு செந்தமானது. யமுனாத்ரி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு, கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும்போது, பஹிரதி நதிக்கரை பகுதியில் இருந்த ஹர்சில் ஹெலிபேடில் இறங்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் விழுந்தது.

பஹிரதி நதியில் இருந்து ஏறக்குறைய 200 முதல் 250 மீட்டர் பள்ளத்தில் ஹெலிகாப்டர் விழுந்தது. விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மாநில பேரிடர் மீட்புப்படையினர், 5 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களில் விஜயலட்சுமி (57), ருச்சி அகர்வால் (56), கலா சந்திரகாந்த் சோனி (61) ஆகியோர் என்பதும் இவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துத. அதேபோல உ.பியைச் சேர்ந்த ராதா அகர்வால் (79), ஆந்திராவைச் சேர்ந்த வேதாந்தி (48) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஆந்திராவைச் சேர்ந்த மக்தூர் பாஸ்கர் உயிருக்குப் போராடி வருகிறார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட செய்தியில் “ உத்தரகாசி அருகே கங்னானி பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்து அதில் 5 பக்தர்கள் உயிரிழந்தது எனக்கு ஆழ்ந்த வேதனையுயம், வருத்தத்தையும் தருகிறது. உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மனவலிமயை இறைவன் வழங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து கேதார்நாத் செல்ல வேண்டிய ஹெலிகாப்டர் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை... மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share