மத்திய அரசு கொடுத்த வார்னிங்... அனைவருக்கு அனுப்பப்பட்ட திடீர் மெசேஜ்... என்னாவா இருக்கும்?
சமீபத்தில் தீவிரமாக பரவி வரும் டிஜிட்டல் அரஸ்ட் மற்றும் முறைகேடுகளில் இருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்னும் மோசடி நிகழ்ந்து வருகிறது. மர்ம கும்பல் ஒன்று ஒருவரை ஓர் அறைக்குள் சிறைப்படுத்தி கொள்ளையடிக்கும் முறையே டிஜிட்டல் அரெஸ்ட் என கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரி போல் பேசி மோசடியில் சிக்கியுள்ளதாகவும் இதுக்குறித்து யாரிடமும் சொல்லாமல் ஒரு அறைக்குள் இருக்குமாறு மர்ம கும்பல் கூறுவதோடு இதில் இருந்து தப்பிக்க குறிப்பிட்ட தொகையை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் மர்ம கும்பல் தெரிவிக்கும்.
தற்போது இந்த மோசடி இந்தியாவில் பெருகி வருகிறது. ஏற்கனவே மக்களிடம் இதற்காக டிஜிட்டல் அரெஸ்ட் தொடர்பாக போன் கால்களில் வரும் காலர் டோன் மூலம் எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்தது. அதில், உங்களிடம் நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், அல்லது உயர் தலைவர்கள் என்ற பெயரில் யாராவது பேசினாலோ.. வீடியோ காலில் பேசினாலோ அதை நம்ப வேண்டாம். அவர்கள் சைபர் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. அது போன்ற போன் கால்கள் வந்தால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இதையும் படிங்க: திடீரென நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பாக். தூதரக ஊழியர்.. என்ன காரணம்?
சைபர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவும் என்று காலர் டோன் மூலம் மத்திய அரசு எச்சரித்து உள்ளது. இந்த நிலையில் தற்போது அனைவருக்கும் மத்திய அரசு ஒரு மெசேஜ் ஒன்றை அனுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதில், சமூக ஊடகங்களில் தெரியாத வீடியோ அழைப்புகள் அல்லது அந்நியர்கள் குறித்து உள்துறை அமைச்சகம் I4C உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. சைபர் குற்றவாளி உங்களை மிரட்டலாம். எச்சரிக்கையாக இருங்கள்.
பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணை அழைக்கவும் என்று அந்த மெசேஜ் தமிழிலும், I4C, Min of Home Affairs alerts against unknown video calls or strangers on social media. cybercriminal may blackmail you. Stay Alert. Call 1930, if fall victim என்று ஆங்கிலத்திலும் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரித்து உள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குடிமக்களை மோசடியில் இருந்து பாதுகாக்க முடியும் என்று எச்சரித்து உள்ளது.
இதையும் படிங்க: UPSC தலைவராகிறார் அஜய்குமார்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு..!