×
 

15 நிமிடத்தில் என்ன ஆச்சு? - புறப்பட்ட வேகத்திலேயே மீண்டும் வீடு திரும்பிய செங்கோட்டையன்...!  

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் வீட்டிற்கே திரும்பி வந்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் வீட்டிற்கே திரும்பி வந்த சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சிக்குள் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்வில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதனால் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்ற எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2000 பேரை நீக்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: செல்போனில் சீக்ரெட் ஆலோசனை... இன்று இரவோடு இரவாக செங்கோட்டையன் செய்யப்போகும் தரமான சம்பவம்...!

தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைக்க போராடுவேன். நீதிமன்றத்தை நாட போகிறேன் என்றெல்லாம் செங்கோட்டையன் தெரிவித்து வந்த நிலையில்,  நாளை தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் அவருக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதற்கான பேச்சுவார்த்தைகளில் விஜயுடன் செங்கோட்டையன் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே நேற்று கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்த செங்கோட்டையன் சென்னையில் உள்ள தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் தங்கினார். இன்று காலை சரியாக 8.30 மணி அளவில் வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட செங்கோட்டையனை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு தவெகவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் அதற்கு பதிலளிக்காமல், மெளனமாக காரில் ஏறி புறப்பட்டார். 

செங்கோட்டையனின் காரை பின் தொடர்ந்து செய்தியாளர்களின் வாகனங்களும் சென்றன. தனது காரை ஊடகங்கள் பின் தொடர்வதை அறிந்த செங்கோட்டையன் இரண்டு தெருக்களை சுற்றிவிட்டு மீண்டும் 15 நிமிடத்தில், அதாவது 8.45 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கே வந்து சேர்ந்தார். 

விஜய் சந்திக்கச் சென்ற செங்கோட்டையன் ஊடகங்கள் கண்ணில் சிக்காமல் இருக்க இந்த சந்திப்பை தவிர்த்தாரா? அல்லது தவெகவில் இருந்து வந்த திடீர் போன் கால் ஏதாவது அவரை மீண்டும் திரும்பி வரச் செய்ததா? என்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: தவெக ’காட்பாதர்’ ஆக மாறும் செங்கோட்டையன் - விஜய் கொடுக்கப்போகும் முக்கிய பதவி? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share