×
 

திடீர் ட்விஸ்ட்..! தனிக்கட்சி ஆரம்பித்த புகழேந்தி திமுகவில் ஐக்கியம்..!!

அதிமுகவில் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்த புகழேந்தி இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

புகழேந்தி, தமிழக அரசியலில் நீண்டகாலமாக அதிமுகவுடன் தொடர்புடைய மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். சசிகலாவின் தீவிர ஆதரவாளராகத் தொடங்கி, பின்னர் அமமுகவில் கர்நாடக மாநிலச் செயலாளராகப் பதவி வகித்தவர். டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து விலகி, ஓ. பன்னீர்செல்வத்தின் அணியில் இணைந்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் முக்கியப் பங்காற்றினார்.

காஅதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால், சமீபகால அதிமுக உட்கட்சி மோதல்களும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி NDA உடன் கூட்டணி அமைத்ததும், ஓ. பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்ததும் புகழேந்தியை கடுமையாக பாதித்தன. ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை அவர் கடுமையாக விமர்சித்தார்.

இதனால், அதிமுகவிலிருந்து முற்றிலும் விலகி, தனியாகப் பயணிக்க முடிவு செய்தார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்ச் 4 அன்று 'புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இது "புரட்சி" என்ற சொல்லை மையமாகக் கொண்டு, அதிமுகவின் பாரம்பரிய கொள்கைகளைப் பேணுவதாகவும், ஆனால் தற்போதைய தலைமையின் NDA கூட்டணியை எதிர்த்து நிற்பதாகவும் அறிவித்தார். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, கட்சியின் கொள்கைகளை விளக்கியபோது, அதிமுகவை அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று தீவிரமாக அறிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தினம் ஒரு நிர்பயா சம்பவம்... அதிமுக இன்பதுரை பார்லிமென்டில் ஆவேசம்..!!

சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் புதிய கட்சிகள் தொடங்கிய வரிசையில் இவரும் இடம்பிடித்தார். ஆனால், புதிய கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே புகழேந்தி திமுகவில் இணைந்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, கட்சியில் இணைந்து கொண்டதாக அறிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஓபிஎஸ் திமுகவில் இணைந்தபோது அதை விமர்சித்த அதே புகழேந்தி, இப்போது அதே திமுகவுடன் இணைந்திருப்பது அதிமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அபுதமமுக..!! எங்க சின்னம் தென்னந்தோப்பு..! புதிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share