பிளவுபட்ட அதிமுக...! செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் அதிமுக EX.MP ஐக்கியம்..!
அதிமுக முன்னாள் எம்.பி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தமிழக அரசியலில் தொடர்ச்சியான கட்சி மாற்றங்கள் மற்றும் கூட்டணி மறுசீரமைப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பார்த்திபன் தமிழக வெற்றிக் கழகம் அணியில் இணைந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்தது. தேனி பெரியகுளம் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், அதிமுக அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான பார்த்திபன், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களுக்கு வழி வகுத்தது. பார்த்திபன் அதிமுகவில் நீண்டகாலமாக தீவிரமான பணியாற்றி வந்தவர். 2014-ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். அப்போது அவர் ஏறத்தாழ 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இது தேனி மாவட்டத்தில் அதிமுகவின் வலுவான அடித்தளத்தை பிரதிபலித்தது. அதன்பிறகு கட்சியின் அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்றத்தில் இணைச் செயலாளராகப் பொறுப்பேற்று, தொண்டர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவரது செல்வாக்கு கணிசமானதாக இருந்தது.
இதையும் படிங்க: சி.வி.சண்முகம் ஆதரவு விஜய்க்கு தேவையில்லை! கார்த்தி சிதம்பரம் எம்.பி அதிரடி!
இப்போது அதிமுக மீண்டும் பிளவு பட்டிருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் எம்பி பார்த்திபன் தன்னை தமிழக வெற்றி கழகத்தை இணைத்துக் கொண்டார். அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி செங்கோட்டையன் வரவேற்றார.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் மெகா திருப்பம்... தவெக கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை ... விஜய் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!