×
 

பாராமதி விமான விபத்து! அஜித் பவார் மரணத்தில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் குமார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய குழுவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்து குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. விபத்து குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர். அவரது உடல் இன்று பாராமதியில் தகனம் செய்யப்பட்டது.

ஜனவரி 28-ஆம் தேதி காலை மும்பையில் இருந்து பாராமதி செல்லும் வழியில் அஜித் பவார் பயணித்த சார்ட்டர்ட் விமானம் (Bombardier Learjet 45) தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக விமானம் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.

விபத்து நடந்த இடத்தில் இன்று சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது விமானத்தின் கருப்புப்பெட்டி (Black Box) மீட்கப்பட்டது. இதில் விமானிகளின் கடைசி உரையாடல்கள், விமான அமைப்புகளின் தகவல்கள் பதிவாகியுள்ளன. கருப்புப்பெட்டியை ஆய்வு செய்ய டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்கு உண்மையான காரணம் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குண்டுகள் முழங்க!! அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்! தலைவர்கள் பங்கேற்பு!

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பாராமதி அருகே நடந்த விமான விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விபத்து தகவல் கிடைத்தவுடன் மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கின. 

விமான விபத்து விசாரணை அமைப்பின் தலைமை இயக்குநர் நேற்றே இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். 3 அதிகாரிகள் கொண்ட குழு மற்றும் சிவில் விமான இயக்குநரக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். நடைமுறைகளின்படி குறிப்பிட்ட காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராமதி விமான நிலையத்தில் தற்போது இந்திய விமானப்படை குழு ஒன்று பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் அடிப்படை விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வானிலை ஆய்வு சேவைகளை வழங்கி வருகின்றனர். இது விமான நிலைய செயல்பாடுகளை தொடர உதவுகிறது.

அஜித் பவார் மறைவு மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது உடல் பாராமதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது. மாநில அரசு 3 நாள் துக்கம் அனுசரித்து வருகிறது. விசாரணை முடிவுகள் வெளியாகும் போது மக்களுக்கு முழு தெளிவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. இந்த சோகம் இந்திய அரசியல் வட்டாரத்தில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குண்டுகள் முழங்க!! அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்! தலைவர்கள் பங்கேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share