அடேங்கப்பா..!! 16,000 பேரா..!! பணி நீக்கம் நடவடிக்கையில் இறங்கிய அமேசான்..!! ஊழியர்கள் ஷாக்..!!
‛அமேசான்' நிறுவனம் அடுத்த வாரம் முதல் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான், வரும் வாரத்தில் 16,000 ஊழியர்களை பணியிடத்திலிருந்து நீக்க உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 30,000 ஊழியர்களை நீக்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில், பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பெருமளவில் நீக்கியது உலகளாவிய செய்தியாக மாறியது. மைக்ரோசாப்ட், டிசிஎஸ், காக்னிசண்ட் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இந்தப் பட்டியலில் அமேசானும் இணைந்தது. ஆன்லைன் ஷாப்பிங், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் விளம்பரம், ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமேசான் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ரூ.3.50 கோடியில் மெட்ரோ பூங்கா, விளையாட்டு மைதானம்..! திறந்து வைத்து பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி..!
இந்நிறுவனம் ஏஐ மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பணியில் அதிகம் இணைத்து, செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 28 முதல், அமேசான் முதல் கட்டமாக உலகம் முழுவதும் 14,000 ஊழியர்களை நீக்கியது. இ-மெயில், தொலைபேசி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இந்த அறிவிப்புகள் அனுப்பப்பட்டன.
இப்போது, இரண்டாவது கட்டமாக ஜனவரி 27 முதல் 16,000 ஊழியர்களை நீக்கும் நடவடிக்கை தொடங்க உள்ளது. இதனால், மொத்த பணி நீக்க எண்ணிக்கை 30,000-ஐ எட்டும். இது, 2023-ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட 27,000 ஊழியர்களை விட அதிகமாகும். இந்தப் பணி நீக்கத்துக்கான முதன்மைக் காரணம் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்று கூறப்படுகிறது.
ஏஐ அமைப்புகள் பல்வேறு பணிகளை தானியங்கியாகக் கையாள்வதால், மனித ஊழியர்களின் தேவை குறைந்து வருகிறது. இதனால், அமேசான் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களான பிளைண்ட் மற்றும் ரெடிட்-இல் பலர் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து வருகின்றனர். "எங்கள் மேலாளர்கள் சூசகமாக பணி நீக்கம் குறித்து எச்சரிக்கின்றனர்" என்று சிலர் பதிவிட்டுள்ளனர். ஜனவரி 27-ஆம் தேதி பெரும் அளவிலான நீக்கம் நடைபெறும் என்ற அச்சம் பரவலாக உள்ளது.
தொழில்நுட்பத் துறையின் இந்தப் போக்கு, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது. செலவுக் குறைப்பு, திறன் அதிகரிப்பு என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய நடவடிக்கைகள், ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன. அமேசான் போன்ற நிறுவனங்கள் ஏஐ-யை மேலும் விரிவுபடுத்தும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற பணி நீக்கங்கள் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு போதிய இழப்பீடு மற்றும் மறுவேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 100 தொகுதி + துணை முதலமைச்சர் பதவி! ராகுல்காந்தியை யோசிக்க வைத்த விஜய்!! கைகூடுமா கூட்டணி?!