×
 

100 தொகுதி + துணை முதலமைச்சர் பதவி! ராகுல்காந்தியை யோசிக்க வைத்த விஜய்!! கைகூடுமா கூட்டணி?!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா அல்லது புதிய அச்சு உருவாகுமா என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.


தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகரும் நிலையில், அரசியல் களம் இதுவரை கண்டிராத மாபெரும் அதிர்வலைகளை சந்தித்து வருகிறது. நடிகரும் தமிழக வெற்றி கழகம் (தவெக / TVK) தலைவருமான தளபதி விஜய் தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்ட அதிரடி "ஆஃபர்" தான் இந்த பரபரப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களின் தகவல்களின்படி, தவெகவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு 100 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ஆட்சி அமைந்தால் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா முன்மொழிவு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் ஆழ்ந்த யோசனையில் ஆழ்த்தியுள்ளது.

ராகுல் காந்தி தற்போது இரு முக்கிய வாய்ப்புகளை ஒப்பிட்டு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. ஒன்று, திமுகவுடன் தொடர்ந்தால் தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிக அதிகம் இருப்பதால் நிச்சயமான ஆட்சி அமைக்க முடியும். ஆனால் ஆட்சியில் காங்கிரஸுக்கு பெரிய அதிகாரப் பங்கு (Power Share) கிடைக்காது. 

இதையும் படிங்க: யாருகூட கூட்டணினு சொல்லுங்க?! தொகுதி எத்தனைனு அப்புறம் பேசலாம்! தேமுதிக பிரேமலதாவுக்கு திமுக - அதிமுக ப்ரசர்!

மறுபுறம், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் காங்கிரஸின் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க 100 தொகுதிகள் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். மேலும், விஜய்யின் செல்வாக்கு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதாக உளவுத்துறை அறிக்கைகளும், கருத்துக்கணிப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.

சமீபத்தில் கரூர் சம்பவம், 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம் உள்ளிட்ட சில சம்பவங்களால் மாநில திமுக அரசும் மத்திய பாஜக அரசும் விஜய்யை பழிவாங்குவதாக ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. இது இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் விஜய் மீது பெரும் அனுதாப அலையை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துக்கணிப்புகள் எதிர்மறையாக இருந்தாலும், விஜய் வெளியே வந்து பேசினால் செல்வாக்கு வானளாவி உயரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். "இந்த எழுச்சி காங்கிரஸுக்கும் புது தெம்பைத் தரும்" என்ற எண்ண ஓட்டம் ராகுல் காந்தியிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரட்டை நிலைப்பாட்டால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகுந்த அதிருப்தியில் உள்ளார். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் காங்கிரஸ் தரப்பு தெளிவான முடிவெடுக்காமல் இருப்பது திமுக தலைமைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக மூத்த அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே, "காங்கிரஸ் போக வேண்டும் என்றால் தாராளமாகப் போகட்டும். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் செலவு உட்பட அனைத்தையும் நாங்களே கவனித்துக் கொள்வோம். அந்த பணத்தை வைத்து எங்கள் சொந்த வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறலாம்" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, ஒரு கட்சியின் முதல் வெற்றி தேர்தலுக்கு முன்பே அமையும் வலுவான கூட்டணியில்தான் உள்ளது. "தற்போதைய கூட்டணியை சிதறாமல் வைத்திருந்தாலே திமுக தனது முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக கருதலாம். வாக்கு சேகரிப்பது அடுத்த கட்டம்" என்று திமுக ஆதரவாளர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் மூலம் இந்த தகவல்கள் வேகமாக பரவி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் இறுதியாக எந்த முடிவெடுக்கும்? திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? அல்லது தவெக-காங்கிரஸ் புதிய அச்சு உருவாகுமா? என்ற கேள்விகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. அடுத்த சில நாட்களில் இதற்கான தெளிவான பதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாஜக - அதிமுக கூட்டணியில் இணைகிறதா தவெக! இரண்டாக பிரியுதா காங்கிரஸ்? செங்கோட்டையன் பதில்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share