எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...
போர் பதற்றத்தை உடனடியாக தணிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது
ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மின்விளக்குகளை அணைக்க வேண்டும் பல்வேறு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எல்லைப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாகவும் பாகிஸ்தானின் நடவடிக்கை தொடர்பாகவும் பொதுமக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் பதற்றத்தை உடனடியாக பாகிஸ்தான் தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!