×
 

முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இந்தியாவின் மூன்று மாநிலங்களை ஒரே நேரத்தில் குறி வைத்து பாகிஸ்தான் தற்போது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்திய பகுதிக்கு வர முயன்ற பாகிஸ்தானின் ஒரு F16 மற்றும் JF 17S என்ற இரண்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

மொத்தமாக மூன்று போர்விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தின. வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது தரைவழி தாக்குதலும் இந்தியா பாகிஸ்தான் இடையே தொடங்கியுள்ளது. பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எல்லையோர மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கனரக பீரங்கிகளுடன் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரி, பூஞ்ச், குப்வாரா, சம்பா, அக்னூர் என அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனிடையே ஸ்ரீநகர் விமான நிலையம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிரவாதிகளுக்கு அரசு மரியாதை.. பதிலடிக்கு மதச்சாயம்! பாகிஸ்தானை தோலுறித்த ராணுவ அதிகாரிகள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share