×
 

செங்கோட்டையில் நடந்த வரலாற்று நிகழ்வு! மெய்சிலிர்க்க வைத்த தருணம்! அமித் ஷா சொன்ன முக்கிய வார்த்தைகள்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை வெகுவாக பாராட்டியுள்ளார். பிரதமரின் உரை அற்புதமானதாகவும், சிறப்பானதாகவும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 80வது சுதந்திர தின உரை, அனைத்து துறைகளிலும் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், சுதேசி, தற்சார்பு மற்றும் தேசமே முதன்மை என்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு பிரதமர் பல்வேறு முக்கிய அம்சங்களை எடுத்துரைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் இல்லாத இந்தியா, பாதுகாப்பான இந்தியா மற்றும் தேசத்தின் நலனை முதன்மையாகக் கொண்ட வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான விரிவான செயல்திட்டத்தை பிரதமர் முன்வைத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய மக்களுக்கு அமெரிக்கா சுதந்திர தின வாழ்த்து: மோடி-டிரம்ப் உறவு குறித்து முக்கிய தகவல்!!

கடந்த 12 ஆண்டுகளில் செமிகண்டக்டர் உற்பத்தி, முக்கிய கனிமங்கள், எரிசக்தி மற்றும் ரயில்வே உள்ளிட்ட துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களையும் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகளையும் பிரதமர் அறிவித்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் முன்வைத்துள்ள ‘ஏழு சக்திகள்’ குறித்த அறிவிப்புகளும் முக்கியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதேசி மற்றும் தற்சார்பு இந்தியாவுக்கான உறுதியை வெளிப்படுத்திய பிரதமரின் சுதந்திர தின உரை, அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னணி நாடாக உருவெடுக்கும் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், சுதந்திரம் பெற்ற 80 ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோட்டை கொத்தளத்தில் ‘வந்தே மாதரம்’ முழுமையாக பாடப்பட்டது வரலாற்று தருணம் என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். அந்த தருணம் தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாகவும், உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை வெகுவாக பாராட்டியுள்ளார். பிரதமரின் உரை அற்புதமானதாகவும், சிறப்பானதாகவும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

‘விக்சித் பாரத்’ என்ற இலக்கை நோக்கி இந்தியாவை மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையும், அதற்கான அர்ப்பணிப்பும் பிரதமரின் உரையில் வெளிப்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஆத்மநிர்பர் பாரத், மேக் இன் இந்தியா தொடங்கி எரிசக்தி பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் இந்தியாவை வல்லரசாக மாற்றுதல் ஆகியவை பிரதமரின் முக்கிய இலக்குகளாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சுதந்திர தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - 20,000 போலீசார் குவிப்பு; ட்ரோன் கண்காணிப்பு தீவிரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share