×
 

அமித் ஷா தலைமையில் நாளை தொடங்கும் முக்கிய மாநாடு! டெல்லியில் குவியும் 850 பாதுகாப்பு அதிகாரிகள்!

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், நாட்டுக்கு எதிராக உருவாகும் புதிய அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி: நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 2 நாட்கள் நடைபெறும் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 850-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், நாட்டுக்கு எதிராக உருவாகும் புதிய அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, உள்நாட்டு பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன. இதுதவிர, நாட்டின் பாதுகாப்புக்கு புதிதாக உருவாகி வரும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதையும் படிங்க: தென் மாநில நதிகளை இணைக்க மாஸ்டர் பிளான்? மோடிக்கும் ஓகே! அமித் ஷா எடுத்த முக்கிய முயற்சி!

இந்த மாநாட்டில் உயர் பதவிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

இதனால், தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான முக்கிய ஆலோசனைக் களமாக இந்த மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலைகள் தொடர்ந்து மாறி வரும் நிலையில், எதிர்கால அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது குறித்தும் மாநாட்டில் கவனம் செலுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள், போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் தொடர்பான தகவல்கள் அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது. மாநில போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறலாம்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முடிவில், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளுக்கான வியூகங்கள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமித் ஷா vs காங்கிரஸ்! 1937 தீர்மானம்!! வந்தே மாதரம் விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share