×
 

புயல் வந்தாச்சு... ரெட் அலர்ட் ரெடி... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மைய இயக்குனர் அமுதா முக்கிய தகவல்...!

புயல் உருவாகியுள்ள நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் அமுதா பேட்டி அளித்தார்.

குமரி கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் டிட்வா புயல் உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று டிட்வா புயலாக உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று டிட்வா புயலாக உருவானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என கூறியது.

இந்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா பேட்டி அளித்தார். அப்போது, வங்க கடலில் டிட்வா புயல் உருவானதாக அறிவித்தார். இன்று ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவித்தார். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

நாளை ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாளை மறுநாள் 29ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்படுவதாக தெரிவித்தார். 28ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்... வங்கக் கடலில் டிட்வா புயல் உருவானது... இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 29ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் 29ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக கூறினார். 

இதையும் படிங்க: அடிச்சு நகர்த்தப் போகுது மழை... சென்னைக்கும் ரெட் அலர்ட்... உஷார் மக்களே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share