×
 

மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!

அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலம், காதராடா கிராமத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த தந்தை, தனது 5 வயது மகளை ஒற்றைக் கையால் தூக்கிச் சென்று அருகிலிருந்த கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

இறந்த சிறுமி லஹரியின் தந்தை ராமவரபு ராஜு. இவருக்கும் மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்று இரவு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தில் இருந்த ராஜு, வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த தனது மகள் லஹரியை திடீரென தூக்கிச் சென்று அருகில் உள்ள கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஈழத் தமிழர்கள் பத்தி பேசுங்க விஜய்..! தமிழக முதல்வருக்கு இலங்கை எம்.பி. அர்ச்சுனா வலியுறுத்தல்..!

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி சிறுமியை மீட்க முயன்றனர். ஆனால், ஏற்கனவே தண்ணீரில் மூழ்கிய சிறுமி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் முழு கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளை கிணற்றில் வீசிக் கொலை செய்ததாக ராமவரபு ராஜுவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல், அப்பாவி குழந்தையின் உயிரைப் பலி கொடுத்த இந்தக் கொடூர செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி லஹரியின் மரணம் பலரையும் கண்ணீர் வடிக்க வைத்தது.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், குடும்பப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருள் விற்கப்படுகிறதா..?? உயர் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share