கழுத்தை நெறிக்கும் பணமோசடி வழக்கு! பிடியை இறுக்கும் அமலாகக்த்துறை! அனில் அம்பானி ஆஜர்!
டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜராகி விளக்கம் அளித்தார். அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.
இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை (ED) தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
காலை 10:30 மணியளவில் வந்த அவர் இரவு 8:20 மணிக்கு மேல் வெளியேறினார். ED அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தை 9 மணி நேரத்துக்கும் மேலாக பதிவு செய்தனர். இது அவரது இரண்டாவது விசாரணை – முதல்முறை கடந்த ஆகஸ்ட் 2025-ல் நடந்தது.
இந்த வழக்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனமான Reliance Communications (RCOM) தொடர்பானது. யெஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை சட்டவிரோதமாக திசைதிருப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: ரூ.3,716 கோடி வீட்டை முடக்கியாச்சு! ரூ.15,700 கோடி சொத்து ஃப்ரீஷ்!! அனில் அம்பானி பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை!
CBI இரண்டு வழக்குகள், ED மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளது. மொத்தம் ரூ.40,000 கோடிக்கு மேல் பணமோசடி, கடன் தவறாக பயன்படுத்தல், ஷெல் நிறுவனங்கள் மூலம் பணம் மாற்றம் என குற்றச்சாட்டுகள் அளிக்கப்பட்டன.
சமீபத்தில் ED, அனில் அம்பானியின் மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள 17 மாடி வீடு 'Abode' (ரூ.3,716 கோடி மதிப்பு) உள்ளிட்ட சொத்துக்களை இணைத்தது. மொத்த இணைக்கப்பட்ட சொத்துக்கள் ரூ.15,700 கோடி அளவுக்கு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ED சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
அனில் அம்பானி சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன், வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி பெறுவேன்" என உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் EDயின் புதிய சம்மன்பேரில் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு அவரை வெள்ளிக்கிழமை (பிப்.27) மீண்டும் அழைத்துள்ளது – இது யெஸ் வங்கி கடன் தொடர்பான தனி வழக்கு.
CBIயும் புதிய FIR பதிவு செய்து, அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது. ரூ.2,223 கோடி பாங்க் ஆஃப் பரோடா கடன் மோசடி தொடர்பானது. அனில் அம்பானியின் நெருங்கிய உதவியாளர் புனித் கார்க் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருகாலத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய பங்குதாரராக இருந்த அனில் அம்பானி, இப்போது பல வங்கி மோசடி வழக்குகளால் சிக்கலில் உள்ளார். இந்த விசாரணை தொடரும் நிலையில், அவரது குழும நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பெரும் தொழில் உலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
இதையும் படிங்க: வெளிநாடு தப்பிச் செல்ல மாட்டேன்! அனில் அம்பானி உத்தரவாதம்! சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்!