×
 

"நீட் வேண்டாம்"..! தமிழகத்தில் எதிரொலிக்கும் போராட்டம்..!! களமிறங்கிய அண்ணாமலை பல்கலை. மாணவர்கள்..!!

நீட் தேர்வுக்கு எதிராக அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலுப்பெற்று வரும் நிலையில், டெல்லியில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடைபெறும் போராட்டத்தின் எதிரொலியாக சென்னையிலும் மாணவர்கள் போராட தொடங்கினர்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஒருங்கிணைந்த குரல் இப்போது இந்திய அளவில் பரவ வேண்டும் என்கிற வலியுறுத்தலுடன் புதிய போராட்ட அழைப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட இந்த அழைப்பு, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது.

கிராமப்புற மாணவர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் இந்தத் தேர்வு செயல்படுவதாக பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியும், மத்திய அரசின் அணுகுமுறை மாறாமல் உள்ளது. இந்தச் சூழலில் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதையும் படிங்க: இந்தியா முழுவதும் இளைஞர்கள் எழுச்சி..! நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு..!!

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள் தொடர்ந்து நீட் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். 

இதையும் படிங்க: அங்க ஏன் போகணும்..? ராகுல் போராட்டம் நேர்மையற்றது... சோனம் வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share