×
 

மற்றொரு இந்து இளைஞர் அடித்து கொலை!! வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!! பற்றி எரியும் கலவரம்!

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் நேற்று ஒரு கும்பலால் அடித் துக் கொல்லப்பட்டார்.

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில், ராஜ்பாரி மாவட்டத்தில் 29 வயது இந்து இளைஞர் அம்ரித் மண்டல் (சம்ராட் என்றும் அழைக்கப்படுபவர்) நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்பாரி மாவட்டம் பங்க்ஷா பகுதியில் உள்ள ஹொசைந்தங்கா பழைய சந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. அம்ரித் மண்டல் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் மற்றும் உள்ளூர் தகவல்களின்படி, அம்ரித் மண்டல் உள்ளூரில் 'சம்ராட் பஹினி' என்ற குழுவின் தலைவராக இருந்தவர். அவர் மீது கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: இந்து இளைஞர் கொலை! வருத்தம் தெரிவிச்சா போதுமா? ஆக்சன் வேணும்! வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்!

சம்பவத்தன்று அவர் பணம் பறிக்கச் சென்றபோது உள்ளூவாசிகளுடன் மோதல் ஏற்பட்டு, கும்பல் தாக்குதலில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது சமூக ரீதியான வன்முறை அல்ல, குற்றச் செயல்கள் தொடர்பான மோதல் என்று வங்கதேச இடைக்கால அரசு விளக்கமளித்துள்ளது.

இச்சம்பவம் சில நாட்களுக்கு முன்பு மைமென்சிங் பகுதியில் தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் இஸ்லாம் அவதூறு குற்றச்சாட்டில் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டு உடல் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடந்துள்ளது. வங்கதேசத்தில் அரசியல் அமைதியின்மை மற்றும் மத அடிப்படையிலான வன்முறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

வங்கதேச இடைக்கால அரசு இக்கொலையை கண்டித்துள்ள அதேவேளை, இது குற்றச் செயல்கள் தொடர்பானது என்று வலியுறுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பிரியங்கா காந்தி மட்டும் பிரதமரா இருந்தா?! காங்., எம்.பிக்கள் சப்போர்ட்! ஓரம்கட்டப்படுகிறாரா ராகுல்காந்தி?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share