×
 

அச்சச்சோ துணை முதலமைச்சருக்கு என்ன ஆச்சு?... மருத்துவர்கள் கொடுத்த ஸ்ட்ரிக்ட் அட்வைஸால் பரபரப்பு...! 

மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும், அவர்களின் ஆலோசனையின்படி அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது வெளியாகியுள்ள தகவல்கள் அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 பவன் கல்யாண் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமன்றக் கூட்டங்கள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும் ஜன சேனா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும், அவர்களின் ஆலோசனையின்படி அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜன சேனா கட்சித் தலைவரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். பவன் கல்யாண் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பவன் கல்யாண் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜன சேனா கட்சி தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: சுகுணா சிக்கன் நிறுவனத்தில் 14 மணி நேரமாக நீடிக்கும் சோதனை... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

காய்ச்சலுடன் பவன் கல்யாண், கடந்த திங்கட்கிழமை நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு முதல் அவருக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து வருவதாக ஜன சேனா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பவன் கல்யாண் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மறுபுறம், பவன் கல்யாண் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோதும், துறை சார்ந்த விஷயங்கள் குறித்து அதிகாரிகளுடன் தொலைபேசி மூலமாக ஆலோசனை கூட்டங்களை நடத்தியதாக ஜன சேனா கட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: “என் தொகுதி நிதியில் கட்டுனதை நீ எப்படி திறப்ப?” - ரேஷன் கடை திறப்பு விழாவில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share